“எனக்கு சொந்த ஊர் கடலூர், பெத்தாங் குப்பம் கிராமம். விவசாய குடும்பம். எம்.பி. ஏ படிச்சிருக்கேன். படிப்பை முடிச்சிட்டு ஒரு தனியார் கம்பெனியில மார்க்கெட்டிங் குடும்பத்தலைவி டு தொழிலதிபர் - 5 பிரிவுல வேலைபார்த்துட்டு இருந்தேன். கல்யாணமாச்சு. என் கணவர் சிங்கப்பூர்ல வேலை பார்த்துட்டு இருந்ததால அங்கேயே செட்டில் ஆயிட்டோம். அங்கேதான் பல வண்ண காளான்களைப் பார்த்தேன். அதுல ஈர்ப்பு வந்ததும் காளான் பத்தி நிறைய தகவல்களைப் படிக்க ஆரம்பிச்சேன். ரெண்டு வருஷங்கள் கழிச்சு இந்தியா வந்ததும் முதல் வேலையா காளான் வளர்ப்பை பிசினஸா செய்யுற முயற்சிகள்ல இறங்கினேன்.

அரசாங்கம் சார்பா நடத்தப்பட்ட இலவச பயிற்சி வகுப்புகள் உட்பட காளான் வளர்ப்பு தொடர்பா நிறைய பயிற்சி எடுத்துக்கிட்டேன். பிறகு ஒரு லட்ச ரூபாய் முதலீட்டுல 360 சதுர அடியில் 2016-ம் வருஷம் என் பிசினஸை ஆரம்பிச்சேன்.

சிப்பிக் காளான், பால் காளான் வகைகளை வளர்க்கத் தொடங்கினேன். முதல் சில மாசங்கள்ல உழைப்பைக் கொட்டியும் நல்ல அறுவடை கிடைக்கல. விதை கொடுத்தவங்க கிட்டகேட்டா, ‘நீங்க ஒழுங்கா பராமரிக்கல’னு ச�ொல்லிட்டாங்க. ஆனா, தரமான விதை களைக் கொடுக்காம என்னை ஏமாத்திட்டாங் கன்னு லேட்டா தான் புரிஞ்சுது. பிறகு எங்க ஏரியாவுல உள்ள வேளாண் அறிவியல் மையத்துலேருந்து விதைகளை வாங்கி பிசினஸை தொடர்ந் தேன

க ா ள ா ன் வளர்க்கி ற து லேசான காரியம் இல்ல. கொஞ்சம் கவனக்குறைவா இருந ்தா லும் ம ொ த ்த காளானும் பூஞ்சைத்தொற்று வந்து வீணாகிடும். பிசினஸ் ஆரம்பிச்ச சில மாசங்கள்லேயே கிட்டத்தட்ட 80,000 ரூபாயை இ ழ ந ்தேன். த வறுக ளைத் திருத்திட்டு திரும்ப விதைக்க ஆரம்பிச்சேன். ப ல கட்ட போராட்டத்துக்குப் பிறகுதான் காளான் வளர்ப்புல உள்ள சூட்சமங்கள் பிடிபட்டுச்சு’’ என்ற கெளரி, பாலிதீன் பைகளில் வைக்கோலை அடைத்துக் கொண்டே பேச்சைத் தொடர்ந்தார

“வெவ்வேறு ரகங்கள்ல உற்பத்தி பண்ண காளானின் முதல் அறுவடையை எங்க பகுதி மக்களுக்குதான் கொடுத்தேன். காளான்கள் பல்வேறு நிறங்கள்ல இருந்ததால செயற்கை கலர் எதுவும் பயன்படுத்திருக்கோம்னு நினைச்சு வாங்குறதுக்கு மக்கள் தயக்கம் காட்டுனாங்க. இது காளான்ல ஒரு ரகம்னு ச�ொல்லிப் புரியவெச்சதும் வாங்கினாங்க. அடுத்தபடியா கடைகளுக்கு, வீடுகளுக்குனு விற்பனை பண்ண ஆரம்பிச்சேன். அப்புறம் மக்களே எங்க வீடு தேடி வந்து வாங்க ஆரம்பிச்சாங்க. பிசினஸ் ஆரம்பிச்ச முதல் அஞ்சு வருஷம் வரை விதைகளை வெளியே இ ரு ந் து தான் வ ாங்கிட்டு இருந்தேன் . 2021-லேருந்து விதைகளையும் நானே உற்பத்தி பண்ண ஆரம்பிச்சேன். அரசாங்கத்து லேருந்து ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டம் மூலமா கடனுதவி கிடைச்சுது. அதனால் சில மெஷின்களை வாங்கி தொழிலை விரிவு படுத்தினேன்.

எங்க பகுதியில் உள்ள வேளாண் அறிவியல் மையம் மூலமா காளான் வளர்க்க விரும்புறவங் களுக்கு காளான் உற்பத்தி வகுப்பு பயிற்சிகள் எடுக்குற வாய்ப்பும் எனக்கு கிடைச்சுது. என்கிட்ட பயிற்சி பெற்ற 50-க்கும் மேற்பட்ட வ ங்க இன்னிக்கு காளான் உற்பத்தியை தங்களோட பிசினஸாக மாத்தி யிருக்காங்க. அவங்களுக்கு உ ற்பத் தி மட்டுமில ்லா ம , விற்பனை, மார்க்கெட்டிங் போன்றவற்றுக்கும் உதவுறேன். உபரி காளான்களை பிஸ்கட், ஊறுகாய், சூப் மிக்ஸ்னு மதிப்புக் கூட்டல் செஞ்சும் விற்பனை பண்ணிக்கிட்டு இருக்கோம

என்னோட பண்ணையில் இப்போ ஒரு நாளைக்கு 15 கிலோவிலேருந்து 20 கிலோ வரை காளான் உற்பத்தி பண்றேன். ஒரு கிலோ காளான் 200 ரூபாய் வரை விலை போகுது. என் கணவரும் என்கூட சேர்ந்து காளான் வளர்ப்பு பிசினஸ்தான் பண்றாரு. வீட்டிலிருந்தே, குழந்தைகளையும் பார்த்துக் கிட்டு மாசம் 80,000 ரூபாய் வரை சம்பாதிக் கிறேன். உழைக்கத்தயாரா இருந்தா அதுக்கேத்த கூலி நிச்சயம் கிடைக்கும்’’ என்று கெத்தாக சொல்கிறார் கௌரி

மேலும்

கோவை தொப்பம்பட்டி கிராமத்தில் இருக்கிறது ‘விஜயலட்சுமி மெட்டல் செயின் ஒர்க்ஸ் தொழிற்சாலை’. ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் அடைக்கப்பட்ட அந்தத் தொழிற்சாலை யில் காப்பர் கம்பிகளை வளைப்பதும், க�ோப்பதுமாக கவரிங் செயின்கள் தயாரிக்கும் வேலைகள் மும்முரமாக நடக்கின்றன. தங்கம் மற்றும் அவரின் கணவர் தனபாலன் ஆகியோர் இந்தத் தொழிற்சாலை உரிமை யாளர்கள். சிறிய அளவில், வீட்டிலேயே கவரிங் நகைகளைத் தயாரித்து வந்தவர்கள் இன்று சொந்தமாக த�ொழிற்சாலை அமைத்து, லட்சங்களில் டர்ன் ஓவர் செய்கிறார்கள். கவரிங் செயின்களுக்கு வளையங்கள் தயாரித்த படியே பேச ஆரம்பித்தார் தங்கம

“சென்னையில எங்க அம்மா, வீட்ல மெஸ் வெச்சு நடத்திட்டு இருந்தாங்க. நான் ஆறாவது வரை படிச்சேன். அப்புறம் படிப்பு வரலைனு பள்ளிக்கூடத்துக்குப் போகாம மெஸ் வேலை களைப் பார்க்க ஆரம்பிச்சுட்டேன். மெஸ் வேலைகளையெல்லாம் முடிச்சு நைட் கணக்கு வழக்கு பார்ப்போம். அப்பல்லாம் ஒரு நாளைக்கு கையிருப்பு காசு எவ்வளவுனு ஆசையா கேட்டுத் தெரிஞ்சுப்பேன். ஏதாவது பிசினஸ் செய்யணுங்கிறது சின்ன வயசு லேருந்தே என்னோட ஆசை

கணவரும் படிக்கல. கல்யாணமானபோது என் வீட்டுக்காரர் கவரிங் நகை தயாரிச்சுட்டு இருந்தாரு. அவர்கிட்ட இருந்து நானும் கத்துக் கிட்டேன். ரெண்டு பேரும் சேர்ந்து சென்னை யில சின்ன அளவுல பிசினஸ் பண்ணிட்டு இருந்தோம். இதே தொழிலை என் கணவரோட சொந்தக்காரங்க கோவை பண்ணிட்டு இருந்தாங்க. அதனால சென்னையிலேருந்து க�ோயம்புத்தூர் வந்துட்டோம். வெறும் முப்பதாயிரம் ரூபாய் முதலீட்டுல எங்க பொண்ணு பேர்ல நிறுவனத்தை ஆரம்பிச் சோம். நகைகளை செஞ்சு நிறைய கடைகள்ல ஏறி இறங்கி ஆர்டர்கள் எடுத்தோம். இப்போ 15 பேர் எங்ககிட்ட வேலை செய்யற அளவுக்கு பிசினஸ் வளர்ந்திருக்கு’’ என்ற தங்கம், கவரிங் நகை தயாரிப்பு பற்றி பேச ஆரம்பித்தார்.

நாங்க முறுக்கு செயின் மாடல் தயார் பண் றோம். முதல்ல காப்பர் கம்பிகளை வாங்கிட்டு வந்து, அதைத் தட்டி வளையம் மாதிரி ஆக்குவோம். அந்த வளையத்தை ஒண்ணோடு ஒண்ணா கோர்க்கனம் . அப்புறம் துத்தநாகம், சல்ஃபர் கலந்த கெமிக்கல் பொடியில முக்கி எடுத்து காயவெச்சு, சமமாக்கி கவரிங் கடைகளுக்குக் கொடுத்துடுவோம் . அவங்க பாலிஷ் பண்ணி என்ன விலைக்கு வேணும் னாலும் வித்துப்பாங்க.

கொரோனா வந்து மூணு வருஷங்களுக்கு வாழ்க்கையையே புரட்டிப்போட்டுருச்சு. பல போராட்டங்களுக்குப் பிறகு இப்போதான் தொழில் திரும்ப சூடு பிடிக்க ஆரம்பிச்சுருக்க

நுணுக்கமான வேலைங்கிறதால ஒரு நாளைக்கு 100 செயின்கள்தான் தயார் பண்ண முடியுது. அடிக்கடி பணநெருக்கடி வரும். எங்க ஏரியாவுல இருக்குற மகளிர் சுய உதவிக் குழுவுல சேர்ந்த பிறகு பண நெருக்கடி க�ொஞ்சம் குறைஞ்சுது. பல நேரங் கள்ல குழு உதவியோட தான் பிசினஸை நடத்த முடிஞ் சுது. ஒரு கட்டத்துல பிசின ஸ ை இ ன் னு ம் க � ொஞ்ச ம் டெவ ல ப் பண்ணலாம்னு நினைச் சப்போ யாருமே கடன் க � ொ டு க்க ல. எ ங்கே போனாலும் அடமானமா ஏதாவது கேட்டாங்க. அ ட ம ா னம் வைக்க பொருள் இருந்தா நாங்க ஏன் கடன் கேட்கப் போறோம்னு . வழி தெரி ய ா ம நின்னப ்ப தான் அ ர சாங்கத்த ோ ட ‘வாழ்ந்து காட்டுவ�ோம்’ திட்டம் மூலமா 33 சதவிகிதம் மானியத் த�ோட ரெண்டு லட்சம் ரூபாய் லோன் கிடைச்சுது. பிசினஸை க�ொஞ்சம் டெவலப் பண்ணோம். ஒரு மாசத்துக்கு 1,000 செயின்கள் தயாரிச் சுட்டு இருந்த நாங்க, இப்போ மாசம் 4,000 செயின்கள் தயார் பண்றோம்.

மாசம் ஒன்றரை லட்சம் டர்ன் ஓவர் பண்றோம். இத்தனை வருஷ வாழ்க்கையில என்னை உறுத்தற விஷயம், படிக்காமப் போனதுதான். ஒரு ஃபார்ம் நிரப்பணும்னா கூட யாரையாவது தேடணும். படிக்காதது னால நிறைய இடங்கள்ல பேசாம இருந் துருக்கேன். அதனாலயே ஆரம்பத்துல இருந்து எங்க பொண்ணுக்கு படிப்போட முக்கியத் துவத்தைச் சொல்லி வளர்த்தோம். அவளை எம்.எஸ்சி வரை படிக்க வெச்சுட்டோம். சொத்து எதுவும் இல்லைனாலும் எங்க மகளோட படிப்பு எங்களை நிச்சயம் காப்பாத்தி கரை சேர்த்துடும்”

மேலும்

விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி கிராமத்தில் இருக்கிறது ‘கலைமகள் சுடுமண் சிற்பக்குழு’. 20 பெண்கள் சேர்ந்து தொடங்கிய இந்தக் குழுவின் மூலம் இன்று 91 பெண்கள் வேலைவாய்ப்பு பெற்றிருக்கிறார்கள். இவர்களில் பலர் பள்ளிப்படிப்பைக்கூட முடிக்காத வர்கள். ஆனால், இன்று லட்சங்களில் டர்ன் ஓவர் செய்கிறார்கள். இவர்கள் தயாரிக்கும் களிமண் கலைப்பொருள்கள் தமிழ்நாடு முழுவதும் விற்பனைக்குச் செல்கின்றன. குழு உறுப்பினர்களில் ஒருவரான வேல்விழியிடம் பேசினோம்.

‘`நாங்க எல்லாரும் வெவ்வேறு மகளிர் சுய உதவிக்குழுக்கள்ல இருந்தோம். 2020-ல அரசாங்கத்துலேருந்து மகளிர் சுய உதவிக் குழு பெண்களுக்காக களிமண் கலைப்பொருள் பயிற்சி கொடுத்தாங்க. அதுல வெவ்வேறு குழுக்களைச் சேர்ந்தவங்க கலந்துக்கிட்டோம். அந்தப் பயிற்சியில பொம்மை தயாரிப்பு, மார்க்கெட்டிங் டெக்னிக்னு நிறைய விஷயங்களைக் கத்துக்கிட்டோம். பயிற்சி எடுத்துக் கிட்ட 20 பேர் ஒண்ணா சேர்ந்து இந்த பிசினஸை தொடங்கினோம்’’ என்கிறார் வேல்விழி.

திர்ப்பு. ‘சட்டி, பானையெல்லாம் நீ ஏன் செய்யணும்’, ‘களிமண்கூட சேர்ந்து நீயும் மண்ணா போகப்போறேன்’னு வாங்காத பேச்சுகளே கிடையாது. எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு தொழிலை ஆரம்பிச்சோம். என் பிள்ளைங்களை இங்கிலீஷ் மீடியத்துல படிக்க வைக்கணும்கிறது என்னோட ஆசை. இதோ இருக்காங்களே கன்னியம்மா... அவங்க வீட்டுக்காரர் தவறினதும், மூணு பிள்ளைங் களை வளர்த்துக்காட்டணும்கிற வைராக்கியத் தோட இருந்தாங்க. இப்படி இங்க இருக்குற 91 பேருக்கு பின்னாடியும் ஒரு கதையும், தேவையும் இருக்கு. அதை நோக்கித்தான் எல்லாரும் ஓட ஆரம்பிச்சோம்...’’ பிசினஸில் சந்தித்த சவால்கள் பகிரும் பரிமளாவைத் தொடர்கிறார் குழுத்தலைவர் மலர்விழி.

“மண் பொம்மை செய்யுறது சாதாரண விஷயமில்ல. மண்ணை மிதிச்சு பக்குவப் படுத்தணும், சுத்தப்படுத்தணும், அரைக்கணும். அச்சு போட்டு காய வைக்கணும், பெயின்ட் அடிச்சு விற்பனைக்கு அனுப்பணும். திட்ட மிட்டு பண்ணாதான் 365 நாளும் நமக்கான வேலைவாய்ப்பை உருவாக்கி, தொழில் பண்ண முடியும். 2020-ல குழு ஆரம்பிச்சபோது நிறைய சிரமங்கள் இருந்துச்சு. பொருள்களை செஞ்சுட்டு ஆர்டர் வாங்குறதுக்காக கடை கடையா ஏறி இறங்கியிருக்கோம். அப்புறம் ஸ்டால்கள் போட்டது மூலமா தமிழ்நாட்டுல இருக்குற மொத்த வியாபாரிகள் எங்களுடைய பொருள்களை வாங்க ஆரம்பிச்சாங்க. கிடைச்ச லாபத்தை தொழில்லேயே முதலீடு பண்ணோம்.

மண்ணைக் கரைக்கிற மெஷின், மண் பிசையுற மெஷின்களை வாங்கினோம். எங்களுக்குனு ஓர் இடத்தை வாடகைக்கு எடுத்தோம். வியாபாரிகள் புதுப்புது மாடல்கள் கேட்டாங்க. அதனால் மத்த குழுக்கள்ல இருந்த பெண்களையும் எங்கத் தொழிலில் சேர்த்துக்கிட்டோம். இப்போ 100 வகையான பொருள்கள் தயார் பண்றோம்” - சொல்லும் போதே மலர்விழியின் கண்களில் மகிழ்ச்சி பிரகாசிக்கிறது.

“20 பேர் கொண்ட குழுவுல மட்டும் மாசம் ஏழு லட்சத்துக்கு மேல டர்ன் ஓவர் பண்றோம். மத்த பெண்கள் தயார் பண்ற பொருள்களை குழு மூலம் விற்பனை பண்றோம். சின்னச் சின்ன பணத்தேவைகளை எங்களுக்குள்ளேயே வாங்குறதும், கொடுக்குறதுமா நாங்களே பூர்த்தி பண்ணிக்கிறோம். கொஞ்ச நாளைக்கு முன்னாடி குழு உறுப்பினரான குணா அக்காவுக்கு, மெஷின்ல வேலை செய்யுறப்போ விரல் கட்டாயிருச்சு. அவங்களுக்கான மருத்துவ செலவை குழுவுல உள்ள எல்லா பெண்களும் பகிர்ந்துகிட்டோம். எங்க குடும்பத்துக்க ான பணத் தேவைகளையும் பூர்த்தி பண்றோம். மொத்தத்துல குடும்பத்துலயும் சமுதாயத்துலயும் எங்க மேல மதிப்பும் மரியாதையும் கூடியிருக்கு...’’ பெருமை பொங்க விடைபெறுகிறார்கள் உழைப்பாளிகள்.

மேலும்

“நாங்க யாரும் பெருசா படிக்கல. அதனால தறி ஓட்டிக் கிடைச்ச வருமானத்துல வாழ்க்கை நடத்திட்டிருந்தோம். தினம் மூணு வேளை சாப்பாடு கிடைக்கிறதே பெரிய விஷயமா இருந்துச்சு. ஆசைப்படுற சின்ன பொருளைக் கூட வாங்க முடியாது. இப்படியான சூழ்நிலை யில இருந்த எங்களுக்கு 2002-ல மகளிர் சுய உதவிக்குழு பத்தி தெரிய வந்துச்சு. பத்து பெண்கள் ஒண்ணா சேர்ந்து குழுவை ஆரம் பிச்சோம். குழுவுல சேர்ந்ததும் 25,000 ரூபாய் கடன் உதவி கிடைச்சுது. அந்தப் பணத்துல காய்கறி வியாபாரம் தொடங்கினோம். அப் புறம் மெத்தைகளுக்கான கவர்கள் தயாரிச்சு விற்க ஆரம்பிச்சோம். இப்படி சீசனுக்கு தகுந்த மாதிரி வேற வேற தொழில்களைப் பண்ணிட் டிருந்தோம். நிரந்தர வருமானம் இல்லை. அப்பதான் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சணல் பைகள், அலங்காரப் பொருள்கள் தயாரிக்கிறதுக்காக அரசாங்கம் கொடுத்த பயிற்சி வகுப்புகள்ல கலந்துகிட்டு பயிற்சி எடுத்துக்கிட்டோம். அரசாங்கத்துலேருந்து ரெண்டு லட்ச ரூபாய் கடன் உதவி கிடைச்சுது. அதை வெச்சு ரெண்டு தையல் மெஷின்கள் வாங்கி சணல்பைகள் தயாரிக்க ஆரம்பிச்சோம்’’ என்ற குழு உறுப்பினர் முத்துலட்சுமியைத் தொடர்ந்து, சணல் பைகள் தயாரிப்பு முறை பற்றி பேச ஆரம்பித்தார் கிருபா.

“சென்னை, கொல்கத்தாவுல இருந்த மெட்டீரியல்கள் வாங்கு றோம். ஆரம்பத்துல நாங்க தைச்ச பைகளைத் தூக்கிக் கிட்டு நிறைய கடைகள் ஏறி இ ற ங் கியிருக்கோ ம் . ஸ ்டா ல்கள் போ ட் டு விற்பனை செஞ்சோம். எங்க தயாரிப்புகள் பத்தி வெளி மாவட்டங்களுக்கும் தெரிய ஆரம்பிச்சுது. இப்போ 750 வகையான பொருள்களை டிசைன் பண்றோம். 30 ரூபாய் லேருந்து 700 ரூபாய் வரைக் கும் எங்ககிட்ட பொருள்கள் இருக்கு. கடைகள், திருமண வீ டு க ள், க ா ர்ப்பரே ட் நிறுவனங்கள்னு நிறைய பேர் நாங்க தயாரிக்கிற பொருள் களை வாங்கறாங்க’’ என்று கிருபா முடிக்க, குழுத்தலைவர் அமலோற்பவமேரி பேச ஆரம்பித்தார்.

“எங்களுக்குனு இப்போ தனி யூனிட் இருக்கு. நிறைய ஆர்டர்கள் வரும்போது எங்க ஊர் ஆண்களுக்கும் நாங்க வேலை வாய்ப்பு தர்றோம். துணி ஆர்டர் போடுறது, கட் பண்றது, தைக்கிறது, பிரின்ட் பண்றது, ரன்னர் போடுறது, ஸ்டால் போடுறதுன்னு யாருக்கு என்னவேலைதெரியுமோ அதைப்பண்ணிட்டி ருக்கோம். ஆர்டர் பொறுத்து மாசத்துக்கு குறைஞ்சது 2 லட்சத்துல இருந்து ஏழு லட்சம் ரூபாய் வரை டர்ன் ஓவர் பண்றோம். எங்க பிள்ளைகளைப் படிக்க வெச்சுருக்கோம். குடும் பத்துக்கு பாரமா இருக்கோம்னு கவலைப்பட்ட நாங்க இன்னிக்கு குடும்பத்தோட பாரத்தை தூக்கிச் சுமக்குற நிலைமைக்கு வந்துருக்கோம். தன்னம்பிக்கையோட போராடினா போதும். நல்லதெல்லாம் தானா நடக்கும்.’’

மேலும்

“பெருசா படிக்கல... வயக்காட்டுல களையெடுக்குற வேலையைத் தவிர சம்பாதிக்க வேற வழி தெரியாம ஆடு, மாடுகளை மேச்சுகிட்டுத் திரிஞ்சிட்டிருந்தோம். அம்பது, நூறு சம்பா தி ச்சா வீட்டு செ லவுக் கு ஒத்தாசையா இருக்கும்னு கிடைச்ச வேலைகளை பண்ணிட்டு இருந்த நாங்க எல்லாரும் இப்போ தொழிலதிபர்கள். 78 முதலாளிகளைக் கொண்டது எங்க பிசினஸ். ஒவ்வொருத்தரும் மாசம் ஐம்பதாயிரம் ரூபாய்க்கும் மேல சம்பாதிக்கிறோம். எங்க முயற்சி எங்க வாழ்க்கையை மாத்தியிருக்கு. அதுக்கான ஆரம்ப புள்ளி இந்தப் பெண்கள் படைதான்” - தன் குழு உறுப்பினர்களை காட்டியபடியே பேசுகிறார் பிரியதர்ஷின

நாமக்கல் மாவட்டம் சப்பையாபுரம் கிராமத்தைச் சேர்ந்த, ‘சப்பையாபுரம் வுமன்வீவர்ஸ் கிளஸ்டர்’ குழுவினர் இவர்கள். 100 ரூபாய் சம்பளத்துக்கு விவசாயக்கூலிகளாகவும், பவர்லூம் கூலிகளாகவும் இருந்தவர்கள், இன்று நாள் ஒன்றுக்கு 2,000 ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கிறார்கள். பெண்கள் ஒன்று சேர்ந்தால் அற்புதங்களை நிகழ்த்த முடியும் என்பதற்கு, தங்களின் வாழ்க்கையை முன்னுதாரணமாக வைத்தே பேச ஆரம்பித்தனர்

டவைகளை வெளிமாநிலங்களுக்குக்கூட விற்பனைக்கு அனுப்புறோம். இந்த இடத்தைப் பிடிக்க பல அவமானங்களை சந்திச்சிருக்கோம். எங்கள்ல பல பேருக்கு பேங்க் பத்தி தெரியாது, லோன் பத்தி தெரியாது, சிலருக்கு கையெழுத்துகூட போடத் தெரியாது. இதை எல்லாம் மாத்தி தொழிலதிபர்னு அங்கீகாரத்தோட வாழ ஆரம்பிச்சிருக்கோம். இதுக்குப்பின்னாடி உழைப்பையும் நம்பிக்கையையும் தவிர எதுவுமே இல்ல” என்று திலகம் முடிக்க, பிசினஸ் தன் வாழ்க்கையை மாற்றியது குறித்து பேச ஆரம்பித்தார் மற்றோர் உறுப்பின ரான பிரியதர்ஷினி.

‘`எனக்கு எட்டாவது படிச்சு மு டி ச்ச வு டனே க ல ்யாணம் ஆயிருச்சு. திருமணம் முடிஞ்சப்போ எங்க வீட்டுக்காரர் பவர் லூம்ல கூலி வேலை பார்த்துட்டு இருந்தாரு. நான் விவசாயக் கூலியா வேலைக்குப் போக ஆரம்பிச்சேன். மகளிர் சுயஉதவிக் குழுவுல சேர்ந்தா குறைஞ்ச வட்டிக்கு நாலாயிரம் ரூபாய் கடன் தர்றதா சொன்னாங்கனு குழுவுலசேர்ந்தேன். அது என் வாழ்க்கையை மாத்தும்னு அப்போ நினைக்கல. அப்புறம் தொலைதூரக் கல்வியில படிப ்பை த் தொட ர ்ந்தே ன் . இப்போ நான் எம்.பி. ஏ பட்டதாரி. எங்க ஊர்ல வெவ்வேறு குழுக்கள்ல இருந்த பெண்களுக்கு அரசாங்கத்துல இருந்து பவர்லூம்ல புடவை நெய்யுறதுக்கான பயிற்சி கொடுத்தாங்க. பயிற்சி எடுத்துக்கிட்டு தினக்கூலிகளா பவர்லூம் வெச்சிருந்தவங்ககிட்ட வேலைக்குச் சேர்ந்தோம். தினமும் 200- 300 ரூபாய் சம்பளமா கிடைச் சுது. சில வருஷங்கள்ல குழுக்கள் மூலமாவே மானியத்தோட வங்கிக்கடன் கிடைச்சுது. ஒவ்வொருத்தரும் அவங்கவங்க வீடுகள் லயே ரெண்டு தறி போட்டோம்.

கூலி வேலை பார்த்துட்டு இருந்தவங்க முதலாளி ஆனோம். எங்க கணவர்களையும் முதலாளி ஆக்கினோம். வீட்டுல சொந்தத் தறி போட்ட பிறகு ஒவ்வொருத்தரும் ஒரு நாளைக்கு நாலு புடவைகள் நெய்ய முடிஞ்சுது.

எங்களோட புடவைகளை மற்ற வியாபாரிகள் வாங்கி, அதிக விலை வெச்சு விற்பனை பண்ணாங்க. எங்களுக்கு லாபம் கம்மியாதான் கிடைச்சுது. அதனால நாங்க எல்லாரும் நெய்யுற புடவைகளை யெல்லாம் சேர்த்து வாரம் 1,000 புடவைகளுக்கு மேல நெய்து தர்றோம்னு மொத்த வியாபரிகள் கிட்ட பேசினோம். ஆர்டர்களும் கிடைச்சுது. இப்போ எங்களுக்கு ஒரு புடவைக்கு 500 ரூபாய் லாபம் கிடைக்குது. வீட்டு வேலைகளையும் பார்த்துக்கிட்டு முடிஞ்ச அளவு தறி ஓட்டி பெண்கள் சம்பாதிக்கிறாங்க. இப்போ நாங்களும் முதலாளிகள்’’ - பெருமையாகச் சொல்லும் பிரியதர்ஷினியைத் தொடர்ந்து எதிர்கால திட்டங்கள் பற்றி பேச ஆரம்பித் தார் உறுப் பினர்களில் ஒருவரான விஜி.

“நாங்க வசிக்கிற கிராமங்கள்ல வேலை வாய்ப்பு மிகப்பெரிய பிரச்னை. அதை சரி பண்றதுதான் எங்க இலக்கு. இப்போ எம்.எஸ் எம். இ மூலமா எம்.சி.டி.பி திட்டத்துக்கு (Micro Small Enterprises Cluster Development Programme) விண்ணப்பிச்சு இருக்கோம். அது அப்ரூவ் ஆயிட்டா எங்களுக்கு கிட்டத்தட்ட ஆறரை கோடி ரூபாய் கடனா மானியத்தோட கிடைக்கும். அதை வெச்சு எங்க ஊர்லயே பெரிய தொழிற்சாலை கட்டி நாங்களே நூல் தயாரிப்பு, புடவை நெய்யுறது, பேக்கிங்னு எ ல ்லாத்தை யு ம் பா ர்த்துக்கலா ம்னு இருக்கோம்.

எங்க ஊர்ல இன்னும் பலர், குறைஞ்ச அளவு கூலிக்கு வேலைக்குப் போயிட்டு இருக்காங்க. சில பெண்கள் ஆர்வம் இருந்தும் குடும்ப சூழல் காரணமா வேலைக்குப் போக முடியாம இருக்காங்க. நாங்க தொழிற்சாலை அமைச்சுட்டா இந்த நிலைமையை கண்டிப்பா மாத்திருவோம், அவங்க எல்லாரோட வாழ்க்கை யையும்...’’ - விடை பெறுகிறவர்களின் வார்த்தை களில் அவ்வளவு தன்னம்பிக்கை

 
மேலும்

எ.செந்தில்குமார், காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காட்டில் வசித்து வரும் நான் எனது கணவரின் வருமானத்தில் இரண்டு பெண் குழந்தைகளுடன் சிரமமான முறையில் குடும்பத்தை நடத்தி வந்தேன். தமிழ்நாடு மாநில நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்தின் கீழ் பல்வேறு வகையான பயிற்சிகளை இலவசமாக வழங்குவதை அறிந்து கொண்ட நான் தையல் பயிற்சி பெற தேர்வு செய்யப்பட்டேன்.

எனக்கு 15.07.2022 முதல் 29.08.2022 வரை பயிற்சி வழங்கப்பட்டது. தொழில்முறை பயிற்சியாளர்கள் சிறப்பான முறையில் பல்வேறு வகையான தையல், கட்டிங் மற்றும் பேட்டர்ன் மேக்கிங் என தையல் பயிற்சி அளித்தனர் பயிற்சி முடித்த பின்னர் பயிற்சி நிறுவனத்தின் மூலம் எங்களுக்கு 14:11,2022 தேர்வு நடத்தப்பட்டது. பயிற்சி நிறுவனம் எங்களுக்கு Seing Machine Operator Certificate & Mark sheet வழங்கியது.

நான் சொந்தமாக தையல் தொழிலைத் தொடங்க நம்பிக்கையுடன் இருந்தேன். எனக்கு பயிற்சி அளித்தது மட்டும் இன்றி எனது வீட்டிற்கு அருகில் உள்ள தையல் கடையில் பயிற்சி நிறுவனத்தின் மூலம் ரூ. 7700/- ஊதியத்தில் வேலை வாங்கி கொடுத்தனர். மேலும் என் வீட்டிலேயே ரவிக்கை மற்றும் சுடிதார் போன்றவற்றை தைத்து கொடுத்து அதன் மூலமும் வருவாய் பெற்று வந்தேன்.

நான் எங்கள் பகுதியில் செயல்படும் மகளிர் குழுவில் உறுப்பினராக இருப்பதால், சொந்தமாக தையல் தொழில் தொடங்க வேண்டும் என்ற விருப்பத்தில் மகளிர் குழுவின் மூலம் கடன் கேட்டு விண்ணப்பித்தேன். எனக்கு ரூ.50,000 கடன் கிடைத்தது. அந்தத் தொகையைக் கொண்டு, சொந்த தையல் இயந்திரம் ஒன்றை வாங்கி அதன்மூலம். வீட்டிலிருந்தபடியே வேலை செய்து வருகிறேன். எனக்கு இதன் மூலம் நல்ல வருமானமும் கிடைக்கிறது.

இப்போது, எனது சொந்த தையல் தொழிலை சிறப்பான முறையில் நடத்தி வருவதால் எனக்கு கணிசமான அளவு வருவாய் கிடைத்து வருகிறது. தற்போது நான் மகிழ்ச்சியாகவும், தன்னம்பிக்கையுடனும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எனது வாழ்க்கையை மாற்றிய தமிழ்நாடு மாநில நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்திற்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும்

என் பெயர் கோமதி, நான் நாமக்கல் மாவட்டம். கபிலர்மலை வட்டாரம். சோழசிராமணி ஊராட்சியில் வசித்து வருகிறேன். எனது குழந்தை பிறந்த போதே மாற்றுத் திறனாளியாக பிறந்ததால், எனது கணவர் எங்களை விட்டு பிரிந்து சென்றார். எனது மாற்றுத் திறனாளி குழந்தையுடன் பொருளாதாரத்தில் நான் மிகவும் சிரமப்பட்டேன்.

இத்தகைய சூழ்நிலையில் மகளிர் குழு குறித்து அறிந்து கொண்ட எங்களது பகுதியில் உள்ள 12 பெண்கள் இணைந்து 2000ஆம் ஆண்டில் துர்க்கை மகளிர் சுய உதவி குழுவினை அமைத்து, மாதம்தோறும் ரூ.50/- வீதம் சேமித்து வந்தோம். இந்த சூழ்நிலையில் எனது குழந்தையும் இறந்து விட்டது. ஆதரவற்ற நிலையில் நான் இருந்தபோது எனது குழுவின் உறுப்பினர்களின் ஊக்கத்தினால் தையல் தொழிலை செய்து வருவாய் பெற்று வந்தேன். தொடர்ந்து குழுவாக இணைத்து தையல் தொழிலை செய்திட முடிவெடுத்து, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மூலம் சமுதாய முதலீட்டு நிதியாக 50 ஆயிரம் ரூபாய் பெற்று மூன்று தையல் இயந்திரம் வாங்கி தொழிலை துவங்கினோம்.

மேலும் 6 உறுப்பினர்களுக்கு டாப்செட்கோ கடனாக வங்கியில் 6 இலட்சம் ரூபாய் பெற்று. அத்தொகையிலும் தையல் இயந்திரங்கள் வாங்கி, தையல் தொழில் செய்து, நானும் எனது குழு உறுப்பினர்களும் தினசரி ரூ. 500/- வரை வருமானத்துடன் வாழ்வதாரத்தை உயர்த்தியுள்ளோம்.

ஆதரவற்ற நிலையில் இருந்த என்னுடைய வாழ்வாதாரத்தை உயர்த்திட உறுதுணையாக இருந்த தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்திற்கு எங்களது குழுவின் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும்

திருப்பூர் மாவட்டம். பெரிய வரப்பட்டி கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வரும் குணசேகரன். டிப்ளமோ மெக்கானிக்கல் படித்த பிறகும் உரிய வேலை வாய்ப்பு கிடைக்காததால், தனது தனது குடும்பத் தொழிலான தச்சு வேலையைத் செய்து வந்தார். அவருக்கு இயந்திர தொழில்நுட்பம் குறித்த எவ்வித தொழில் அனுபவமும் இல்லை. என்றாலும் தனது வேலை தேடலை அவர் நிறுத்தவே இல்லை. தனக்கென இயந்திர தொழில் நுட்பத் தொழிலைக் கற்றுக் கொள்வதற்கான வழியைத் தேடினார், அந்த நேரத்தில் அவர் வசித்து வரும் கிராமத்தில் செயல்படும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் பணியாளர்கள் மூலம் வேலை வாய்ப்புடன் கூடிய திறன் பயிற்சிகள் வழங்கும் தீனதயாள் உபாத்தியாய ஊரகத் திறன் பயிற்சித் (DDU (GKY) திட்டம் பற்றி அறிந்து கொண்டார்.

பின்னர் அவர்களின் வழிகாட்டுதலின்படி DMW கல்வி மற்றும் அறக்கட்டளையில் DDU-GKY திட்டத்தின் மூலம் CNC ஆபரேட்டர் பயிற்சியை கற்க தேர்வு செய்யப்பட்டார். இலவச உணவு மற்றும் தங்குமிடத்துடன் பயிற்சி பெற்ற குணசேகரன். பயிற்சிக்குப் பிறகு ஈரோட்டில் உள்ள DMW CNC சொல்யூஷன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் மாதம் ரூ.15,000/- ஊதியத்தில் பணிபுரிகிறார்.

தற்போது குணசேகரன் நவீன தொழில்நுட்ப இயந்திரமான NHX 6300 இயந்திரத்தை இயக்குகிறார். மேலும் இந்த வகை CNC மெஷின்கள் மூலம் தனது குடும்பத் தொழிலான தச்சு வேலையை உருவாக்க அவர் திட்டமிட்டு, அதற்காகத் தன்னை தயார்படுத்திக் கொண்டு வருகிறார். DDU- GKY திட்டத்தின் வேலை வாய்ப்புடன் கூடிய திறன் பயிற்சித் திட்டத்தின் மூலம் பயிற்சியும், தொழில் வாய்ப்பும் பெற்ற குணசேகர், தனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய DDU-GKY திட்டத்திற்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறார்.

 
மேலும்

என் பெயர் கலைச்செல்வி, நான் தஞ்சாவூர் மாவட்டம், புன்னைநல்லூர் கிராமத்தில் வசித்து வருகிறேன். எனது வாழ்வாதார மேம்பாட்டிற்காக எங்கள் பகுதியில் செயல்பட்டு வந்த தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை தயாரிக்கும் தொழிற்கூடத்தில் கூலி வேலைக்கு சென்று வந்தேன். அதன் மூலம் கிடைத்த வருமானம் எனது குடும்பத்தின் வறுமையை போக்க போதுமானதாக இல்லை. தனியார் நுண்நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் வாங்கியே காலத்தை கடத்திக் கொண்டிருந்தேன். இததகைய சூழ்நிலையில் புள்னைநல்லூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் உதவியுடன் அமைக்கப்பட்ட செம்பருத்தி மகளிர் சுய உதவிக் குழுவில் ஒரு உறுப்பினராக இனைந்தேன்.

நான் செம்பருத்தி மகளிர் சுய உதவிக் குழுவில் இணைந்த பின்னர் குழுவின் மூலமாக உள்கடனாக மூன்று முறை தலா ரூ. 20,000/ பெற்று அத்தொகையினை கொண்டு தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை தயாரிக்க கூலித் தொழிலாளியாக சென்ற பொழுது கற்றுக கொண்ட அனுபலத்தின் அடிப்படையில் நான் சுயமாக தஞ்சாவூர தலையாட்டி பொம்மை உற்பத்தி செய்யும் தொழில் செய்யத் துவங்கினேன்.

இப்பொம்மைகள் தயாரிக்கத் தேவையான அடிப்படை மூலப்பொருட்களான சுண்ணாம்பு தூள் மற்றும் காகிதம் ஆகியவற்றை கடலூர் மாவட்டத்திலிருந்து கொள்முதல் செய்து தலையாட்டி பொம்மைகளை நான் தயாரித்து வருகிறேன்.

என்னுடைய தொழிலில் எனது கணவகும், குடும்ப உறுப்பினர்களும் உறுதுணையாக இருந்ததால் அதிகளவில் பொம்ய்ைகள் தயாரிக்க முடிந்தது. நாளொன்றிறகு ஒரு நபருக்கு 15 பொம்மைகள் விதம் குழு உறுப்பினர்களைக் கொண்டு 60 பொம்மைகள் தயாரித்து வருகின்றேன். எங்கள் குழுவினர் தயாரிக்கும் நடனமாடும் பொம்மை, தலையாட்டிப் பொம்மை, செட்டியார் பொம்மை போன்றவைகள் மிகவும் பிரசித்திப் பெற்றவை.

தலையாட்டி பொம்மை ரூ 40/-க்கும். நடனமாடும் பொம்மை ஜோடி ஒன்று ரூ-150/-க்கும் தஞ்சை மாவட்டத்திலுள்ள மதி விற்பனை அங்காடிகளிலும் (தஞ்சை தாரகைகள்) மற்றும் தஞ்சை இரயில் நிலையததில் புதிதாக துவக்கப்பட்டுள்ள ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு (One Station One Product) நிலையத்திலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையத்தில் விற்பனை நல் வரவேற்பை பெற்றுள்ளது. ஒரு நாளைக்கு ரூ 1000/ முதலீடு செய்து ரூ 900/- வரை இலாபம் ஈட்டி வருகிறேன். இதன் மூலம் ஒரு வருடத்திற்கு ரூ1.50 இலட்சம் வருமானம் வருகிறது.

ஒரு வாரத்திற்கு சராசரியாக தஞ்சை தாரகை விற்பனை அங்காடிகளில் ரூ. 1,00,000/ மதிப்பிலான பொம்மைகளும் மற்றும் தஞ்சை இரயில் நிலையத்தில் செயல்பட்டு வரும் விற்பனை நிலையத்தில் ரூ. 25,000- மதிப்பிலான பொம்மைகளும் விற்பனை ஆகின்றது.

வருடத்திற்கு ரூ1.50 இலட்சம் எனக்கு வருமானம் வருகிறது என்னுடைய வாழ்வதாரம் உயர்வதற்கு காரணமாக இருந்த தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்திற்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன.

மேலும்

Page 1 of 3, showing 9 record(s) out of 22 total