Image
Image
Image
Image
Image
Image
Image
Image
About

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்

இந்தியாவிலே முதல் முறையாக டாக்டர். கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் தலைமையில், தமிழக அரசு 1989 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் தர்மபுரி மாவட்டத்தில் வேளாண் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டிருந்த மகளிரைக் கொண்டு.பன்னாட்டு வேளாண்மை வளர்ச்சி நிதி (IFAD) நிதியுதவியுடன் மகளிர் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் சுய உதவிக் குழுக்களை அமைக்க தொடங்கியது.

மேலும் காண்க

சுய உதவிக் குழு அமைப்பு

ஒற்றுமை பல தடைகளைத் தாண்டி இலக்கினை அடைவதற்கு உதவுகிறது. இதன் அடிப்படையில் ஒரே பகுதியில் வசிக்கும் 18 முதல் 60 வயதுக்கு உட்பட்ட 12 முதல் 20 மகளிரை உறுப்பினர்களாகக் கொண்டு சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்படுகின்றன. குழு உறுப்பினர்களிடையே சேமிப்பு பழக்கத்தையும், அவர்களுக்குள்ளேயே உள்கடன் வழங்குதலையும், ஒன்று கூடி ஒற்றுமையாகவும் மற்றும் ஜனநாயக ரீதியாகவும் முடிவெடுக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்துவதும் சுய உதவிக் குழுக்களின் நோக்கங்களாகும்...

மேலும் காண்க
பார்வை
வளர்ச்சிப் பாதையை உள்ளடக்கிய திட்டங்களே பொருளாதார வளர்ச்சியின் வெற்றிக்கு அடிப்படையாகும்.
இயக்கம்
அடிதட்டு மக்களின் வாழ்வாதாரத்தை வழிநடத்தி, ஊக்குவித்து, வாழ்வாதாரத் தொழில்களில் ஈடுபடுத்துவதே அரசாங்கத்தின் முக்கியப் பணியாகும்

செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள்

Image 3

This is a title

This is a short description

Image 3

மகளிர் திட்டம்

இந்தியாவிலே முதல் முறையாக டாக்டர். கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் தலைமையில், தமிழக அரசு 1989 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் தர்மபுரி மாவட்டத்தில் வேளாண் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டிருந்த மகளிரைக் கொண்டு ....

Image 3
Image 3

ஊரக வாழ்வாதார இயக்கம்

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் 2012-13 ஆம் ஆண்டு நிதி விகிதத்தில் செயல்படுத்தப்படும்,,..

Image
Image 3

நகர்ப்புற வாழ்வாதார இயக்கம்

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் நோக்கமானது நகர்ப்புற ஏழைகளிடையே சமுதாயம் சார்ந்த அமைப்புகளை உருவாக்கி அவர்களின் வறுமையையும், நலிவு நிலையையும் குறைத்து சுய வேலை வாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுடன் கூடிய வேலை வாய்ப்புகளுக்கு வழி வகுத்து,.....

Image 3
Image 3

தேசிய ஊரகப் பொருளாதார புத்தாக்கத் திட்டம்

தேசிய ஊரகப் பொருளாதார புத்தாக்கத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டமானது 2019 ஆம் ஆண்டு முதல் 5 மாவட்டங்களில் 20 வட்டாரங்களில்.....

Image 3
Image 3

தீன் தயாள் உபாத்தியாய கிராமின் கௌசல்ய யோஜனா

தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற இளைஞர்கள் வேலைவாய்ப்பு திட்டமானது (DDU-GKY) ஒன்றிய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு இடையே 60:40 என்ற நிதிப் பகிர்வு முறையைக் கொண்ட வேலைவாய்ப்புடன் கூடிய திறன் பயிற்சி திட்டமாகும்....

Image 3
Image 3

வாழ்ந்து காட்டுவோம் திட்டம்

வாழ்ந்து காட்டுவோம் திட்டம் (முன்னர் தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் - TNRTP) தமிழக கிராம சூழலை மறுசீரமைக்க வெவ்வேறு வழிமுறைகளை வகுத்துள்ளது....

நிகழ்ச்சி நிரல்

Image 3

தமிழ்நாட்டில் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன்இணைப்பு மற்றும் நிதி உள்ளாக்கம் ஆகியவற்றை செயல்படுத்திட தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வழிகாட்டுதலில் செயல்படும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் பாரத ஸ்டேட் வங்கி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

மகளிர் முன்னேற்றத்திற்காக செயல்பட்டு வரும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் துணை அமைப்பான தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் (TNSRLM) வழிகாட்டுதலில் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு, சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. அக்குழுக்களின் பொருளாதார சுயசார்பிற்கு வலுசேர்க்கும் வகையில் வங்கிக் கடன் இணைப்புகள் உள்ளிட்ட ஏராளமான கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தமிழ்நாடு அரசின் 2023-2024ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 30,000 கோடி வங்கிக் கடன் இணைப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை செயல்படுத்தி, சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பு வழங்கும் இலக்கை எய்திடவும், சுய உதவிக் குழுக்களுக்கு விரைவாக வங்கிக் கடன் இணைப்புகள் பெற்றுத் தந்திடவும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, 10.05.2023 அன்று சென்னை, நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாக கூட்ட அரங்கில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (TNSRLM) மற்றும் பாரத ஸ்டேட் வங்கி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி. ச.திவ்யதர்சினி, இ.ஆ.ப., அவர்களும், சென்னை வட்ட பாரத ஸ்டேட் வங்கியின் பொது மேலாளர் திரு. நிராஜ் பாண்டா அவர்களும் கையெழுத்திட்டனர்.

இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் செயல் இயக்குநர் திருமதி. பா. பிரியங்கா பங்கஜம், இ.ஆ.ப., அவர்கள், பாரத வங்கியின் துணைப் பொதுமேலாளர் திரு. ஜெகதீஸ்வர் கர்ரி அரசு மற்றும் பாரத ஸ்டேட்வங்கியின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்

இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், சுய உதவிக் குழுக்களின் வங்கி இணைப்பை அதிகரிப்பது மற்று கடன் வழங்குவதில் மாநிலம் முழுவதும் அதிக எண்ணிக்கையிலான கிளைகளை செயல்படுத்துவது, கிராமப்புற ஏழைகளின் கடன் தேவைகளைப் பூர்த்தி செய்ய கடன் சுழற்சியை மேம்படுத்துவது, கடன் திருப்பத்திற்கான எளிய வழிமுறைகளை செயல்படுத்துவது போன்ற பயன்கள் கிடைக்கும். மேற்கூறியவற்றைத் தவிர, முத்ரா, ஸ்டாண்ட் அப் இந்தியா மற்றும் பிற அரசு வழங்கும் திட்டங்களின் கீழ் சுய உதவிக் குழுக்களின் தகுதியுள்ள பெண் தொழில்முனைவோருக்கு SBI வங்கிக் கிளைகள் கடன் வசதிகளை வழங்கும்.

முற்றம் மாத இதழ்

வாழ்வாதார உதவி அழைப்பு எண்

ARTICLES

வெற்றிக் கதைகள்