தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு மற்றும் தன்னம்பிக்கை மூலம் மகளிரின் நிலையை மேம்படுத்தும் நோக்கில் 1983 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்டது.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் பல்வேறு வறுமை ஒழிப்புத் திட்டங்களின் மூலம் தமிழ்நாட்டில் சுய உதவிக் குழுக்களுக்கு திறன் வளர்ப்புப் பயிற்சிகள் வழங்கி, வலுவான சமுதாயம் சார்ந்த அமைப்புகளை உருவாக்கி, நிதி இணைப்புகளையும் தொழில் முன்னேற்றத்தையும் ஏற்படுத்தி, பெண்களின் ஆற்றல் மேம்பாட்டை அதிகரித்து, சுய உதவிக் குழு இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்,நிறுவனமாக பதிவு செய்யப்பட்டு. அரசு முதன்மைச் செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அவர்களைத் தலைவராகக் கொண்டு செயல்படுகிறது. ஊரகம் மற்றும் நகர்ப்புர திட்டங்களைச் செயல்படுத்த மேலாண்மை இயக்குநர் அவர்களும், நகர்ப்புர வாழ்வாதாரத் திட்டத்தின் செயல் இயக்குநர், கருப்பொருள் வல்லுநர்களான கூடுதல் இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் மற்றும் இதர அலுவலர்களுடன் மாநில அளவில் செயல்படுத்தப்படுகிறது. நிதி உள்ளாக்கம், வேளாண்மை மற்றும் தொழில் நிறுவன மேம்பாடு உள்ளிட்ட கருப்பொருட்களில் ஆலோசனை வழங்க திட்ட ஆலோசகர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

மாவட்ட அளவில், இணை இயக்குனர் நிலையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையைச் சேர்ந்த அலுவலரை திட்ட இயக்குநர் TNSRLM தலைமையாகக் கொண்டு மாவட்ட திட்ட செயலாக்க அலகு செயல்படுகிறது. உதவித் திட்ட அலுவலர்கள் திட்டக் களப் பணிகளையும் ஒருங்கிணைத்து செயல்படுத்தி வருகின்றனர்.

வட்டார இயக்க மேலாண்மை அலகானது இயக்க மேலாளர் தலைமையின் கீழ் செயல்பட்டு வருகிறது. வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் ஒதுக்கப்பட்ட திட்டக் கூறுகளை செயல்படுத்தி வருகிறார்கள். நகர்ப்புரங்களில், 3,000 ஏழைக் குடும்பங்களை உள்ளடக்கிய பகுதிகளுக்கு ஒரு சமுதாய் ஒருங்கிணைப்பாளர் வாழ்வாதாரத் திட்டத்தினைக் கண்காணித்து செயல்படுத்துவர்.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் பின்வரும் நான்கு முக்கிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

  • தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (TNSRLM)
  • தேசிய ஊரகப் பொருளாதாரப் புத்தாக்கத் திட்டம் (NRETP)
  • தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கம் (TNULM)
  • தீன் தயாள் உபாத்தியாய கிராமப்புறத் திறன் மேம்பாட்டுத் திட்டம் (DDU-GKY)

 

About