தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ், மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறையின் மூலமாக தொற்றா நோய்களை கண்டறிவதற்காக அதிக ஈடுபாட்டுடன் கூடிய சுய உதவிக் குழு உறுப்பினர்களை மகளிர் சுகாதார தன்னார்வலராக (WHV) நியமித்து மக்களைத் தேடி மருத்துவத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கிராமப்புற மற்றும் நகர்ப்புரங்களில் முறையே 8,713 மற்றும் 2,256 மகளிர் சுகாதார தன்னார்வலர்கள் துணை சுகாதார மையங்களுடன் (HSC) இணைக்கப்பட்டு செயல்படுகின்றனர்.

மகளிர் சுகாதார தன்னார்வலர்கள் (WHV) தொற்றா நோய்களை கண்டறிந்து, அவர்களுக்கு ஆலோசனைகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல் நாள்பட்ட நோயாளிகளுக்கு மருந்துகளை வீடுகளுக்கே சென்று வழங்குகிறார்கள்.