விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி கிராமத்தில் இருக்கிறது ‘கலைமகள் சுடுமண் சிற்பக்குழு’. 20 பெண்கள் சேர்ந்து தொடங்கிய இந்தக் குழுவின் மூலம் இன்று 91 பெண்கள் வேலைவாய்ப்பு பெற்றிருக்கிறார்கள். இவர்களில் பலர் பள்ளிப்படிப்பைக்கூட முடிக்காத வர்கள். ஆனால், இன்று லட்சங்களில் டர்ன் ஓவர் செய்கிறார்கள். இவர்கள் தயாரிக்கும் களிமண் கலைப்பொருள்கள் தமிழ்நாடு முழுவதும் விற்பனைக்குச் செல்கின்றன. குழு உறுப்பினர்களில் ஒருவரான வேல்விழியிடம் பேசினோம்.
‘`நாங்க எல்லாரும் வெவ்வேறு மகளிர் சுய உதவிக்குழுக்கள்ல இருந்தோம். 2020-ல அரசாங்கத்துலேருந்து மகளிர் சுய உதவிக் குழு பெண்களுக்காக களிமண் கலைப்பொருள் பயிற்சி கொடுத்தாங்க. அதுல வெவ்வேறு குழுக்களைச் சேர்ந்தவங்க கலந்துக்கிட்டோம். அந்தப் பயிற்சியில பொம்மை தயாரிப்பு, மார்க்கெட்டிங் டெக்னிக்னு நிறைய விஷயங்களைக் கத்துக்கிட்டோம். பயிற்சி எடுத்துக் கிட்ட 20 பேர் ஒண்ணா சேர்ந்து இந்த பிசினஸை தொடங்கினோம்’’ என்கிறார் வேல்விழி.
திர்ப்பு. ‘சட்டி, பானையெல்லாம் நீ ஏன் செய்யணும்’, ‘களிமண்கூட சேர்ந்து நீயும் மண்ணா போகப்போறேன்’னு வாங்காத பேச்சுகளே கிடையாது. எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு தொழிலை ஆரம்பிச்சோம். என் பிள்ளைங்களை இங்கிலீஷ் மீடியத்துல படிக்க வைக்கணும்கிறது என்னோட ஆசை. இதோ இருக்காங்களே கன்னியம்மா... அவங்க வீட்டுக்காரர் தவறினதும், மூணு பிள்ளைங் களை வளர்த்துக்காட்டணும்கிற வைராக்கியத் தோட இருந்தாங்க. இப்படி இங்க இருக்குற 91 பேருக்கு பின்னாடியும் ஒரு கதையும், தேவையும் இருக்கு. அதை நோக்கித்தான் எல்லாரும் ஓட ஆரம்பிச்சோம்...’’ பிசினஸில் சந்தித்த சவால்கள் பகிரும் பரிமளாவைத் தொடர்கிறார் குழுத்தலைவர் மலர்விழி.
“மண் பொம்மை செய்யுறது சாதாரண விஷயமில்ல. மண்ணை மிதிச்சு பக்குவப் படுத்தணும், சுத்தப்படுத்தணும், அரைக்கணும். அச்சு போட்டு காய வைக்கணும், பெயின்ட் அடிச்சு விற்பனைக்கு அனுப்பணும். திட்ட மிட்டு பண்ணாதான் 365 நாளும் நமக்கான வேலைவாய்ப்பை உருவாக்கி, தொழில் பண்ண முடியும். 2020-ல குழு ஆரம்பிச்சபோது நிறைய சிரமங்கள் இருந்துச்சு. பொருள்களை செஞ்சுட்டு ஆர்டர் வாங்குறதுக்காக கடை கடையா ஏறி இறங்கியிருக்கோம். அப்புறம் ஸ்டால்கள் போட்டது மூலமா தமிழ்நாட்டுல இருக்குற மொத்த வியாபாரிகள் எங்களுடைய பொருள்களை வாங்க ஆரம்பிச்சாங்க. கிடைச்ச லாபத்தை தொழில்லேயே முதலீடு பண்ணோம்.
மண்ணைக் கரைக்கிற மெஷின், மண் பிசையுற மெஷின்களை வாங்கினோம். எங்களுக்குனு ஓர் இடத்தை வாடகைக்கு எடுத்தோம். வியாபாரிகள் புதுப்புது மாடல்கள் கேட்டாங்க. அதனால் மத்த குழுக்கள்ல இருந்த பெண்களையும் எங்கத் தொழிலில் சேர்த்துக்கிட்டோம். இப்போ 100 வகையான பொருள்கள் தயார் பண்றோம்” - சொல்லும் போதே மலர்விழியின் கண்களில் மகிழ்ச்சி பிரகாசிக்கிறது.
“20 பேர் கொண்ட குழுவுல மட்டும் மாசம் ஏழு லட்சத்துக்கு மேல டர்ன் ஓவர் பண்றோம். மத்த பெண்கள் தயார் பண்ற பொருள்களை குழு மூலம் விற்பனை பண்றோம். சின்னச் சின்ன பணத்தேவைகளை எங்களுக்குள்ளேயே வாங்குறதும், கொடுக்குறதுமா நாங்களே பூர்த்தி பண்ணிக்கிறோம். கொஞ்ச நாளைக்கு முன்னாடி குழு உறுப்பினரான குணா அக்காவுக்கு, மெஷின்ல வேலை செய்யுறப்போ விரல் கட்டாயிருச்சு. அவங்களுக்கான மருத்துவ செலவை குழுவுல உள்ள எல்லா பெண்களும் பகிர்ந்துகிட்டோம். எங்க குடும்பத்துக்க ான பணத் தேவைகளையும் பூர்த்தி பண்றோம். மொத்தத்துல குடும்பத்துலயும் சமுதாயத்துலயும் எங்க மேல மதிப்பும் மரியாதையும் கூடியிருக்கு...’’ பெருமை பொங்க விடைபெறுகிறார்கள் உழைப்பாளிகள்.