என் பெயர் கோமதி, நான் நாமக்கல் மாவட்டம். கபிலர்மலை வட்டாரம். சோழசிராமணி ஊராட்சியில் வசித்து வருகிறேன். எனது குழந்தை பிறந்த போதே மாற்றுத் திறனாளியாக பிறந்ததால், எனது கணவர் எங்களை விட்டு பிரிந்து சென்றார். எனது மாற்றுத் திறனாளி குழந்தையுடன் பொருளாதாரத்தில் நான் மிகவும் சிரமப்பட்டேன்.
இத்தகைய சூழ்நிலையில் மகளிர் குழு குறித்து அறிந்து கொண்ட எங்களது பகுதியில் உள்ள 12 பெண்கள் இணைந்து 2000ஆம் ஆண்டில் துர்க்கை மகளிர் சுய உதவி குழுவினை அமைத்து, மாதம்தோறும் ரூ.50/- வீதம் சேமித்து வந்தோம். இந்த சூழ்நிலையில் எனது குழந்தையும் இறந்து விட்டது. ஆதரவற்ற நிலையில் நான் இருந்தபோது எனது குழுவின் உறுப்பினர்களின் ஊக்கத்தினால் தையல் தொழிலை செய்து வருவாய் பெற்று வந்தேன். தொடர்ந்து குழுவாக இணைத்து தையல் தொழிலை செய்திட முடிவெடுத்து, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மூலம் சமுதாய முதலீட்டு நிதியாக 50 ஆயிரம் ரூபாய் பெற்று மூன்று தையல் இயந்திரம் வாங்கி தொழிலை துவங்கினோம்.
மேலும் 6 உறுப்பினர்களுக்கு டாப்செட்கோ கடனாக வங்கியில் 6 இலட்சம் ரூபாய் பெற்று. அத்தொகையிலும் தையல் இயந்திரங்கள் வாங்கி, தையல் தொழில் செய்து, நானும் எனது குழு உறுப்பினர்களும் தினசரி ரூ. 500/- வரை வருமானத்துடன் வாழ்வதாரத்தை உயர்த்தியுள்ளோம்.
ஆதரவற்ற நிலையில் இருந்த என்னுடைய வாழ்வாதாரத்தை உயர்த்திட உறுதுணையாக இருந்த தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்திற்கு எங்களது குழுவின் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.