“எனக்கு சொந்த ஊர் கடலூர், பெத்தாங் குப்பம் கிராமம். விவசாய குடும்பம். எம்.பி. ஏ படிச்சிருக்கேன். படிப்பை முடிச்சிட்டு ஒரு தனியார் கம்பெனியில மார்க்கெட்டிங் குடும்பத்தலைவி டு தொழிலதிபர் - 5 பிரிவுல வேலைபார்த்துட்டு இருந்தேன். கல்யாணமாச்சு. என் கணவர் சிங்கப்பூர்ல வேலை பார்த்துட்டு இருந்ததால அங்கேயே செட்டில் ஆயிட்டோம். அங்கேதான் பல வண்ண காளான்களைப் பார்த்தேன். அதுல ஈர்ப்பு வந்ததும் காளான் பத்தி நிறைய தகவல்களைப் படிக்க ஆரம்பிச்சேன். ரெண்டு வருஷங்கள் கழிச்சு இந்தியா வந்ததும் முதல் வேலையா காளான் வளர்ப்பை பிசினஸா செய்யுற முயற்சிகள்ல இறங்கினேன்.
அரசாங்கம் சார்பா நடத்தப்பட்ட இலவச பயிற்சி வகுப்புகள் உட்பட காளான் வளர்ப்பு தொடர்பா நிறைய பயிற்சி எடுத்துக்கிட்டேன். பிறகு ஒரு லட்ச ரூபாய் முதலீட்டுல 360 சதுர அடியில் 2016-ம் வருஷம் என் பிசினஸை ஆரம்பிச்சேன்.
சிப்பிக் காளான், பால் காளான் வகைகளை வளர்க்கத் தொடங்கினேன். முதல் சில மாசங்கள்ல உழைப்பைக் கொட்டியும் நல்ல அறுவடை கிடைக்கல. விதை கொடுத்தவங்க கிட்டகேட்டா, ‘நீங்க ஒழுங்கா பராமரிக்கல’னு ச�ொல்லிட்டாங்க. ஆனா, தரமான விதை களைக் கொடுக்காம என்னை ஏமாத்திட்டாங் கன்னு லேட்டா தான் புரிஞ்சுது. பிறகு எங்க ஏரியாவுல உள்ள வேளாண் அறிவியல் மையத்துலேருந்து விதைகளை வாங்கி பிசினஸை தொடர்ந் தேன
க ா ள ா ன் வளர்க்கி ற து லேசான காரியம் இல்ல. கொஞ்சம் கவனக்குறைவா இருந ்தா லும் ம ொ த ்த காளானும் பூஞ்சைத்தொற்று வந்து வீணாகிடும். பிசினஸ் ஆரம்பிச்ச சில மாசங்கள்லேயே கிட்டத்தட்ட 80,000 ரூபாயை இ ழ ந ்தேன். த வறுக ளைத் திருத்திட்டு திரும்ப விதைக்க ஆரம்பிச்சேன். ப ல கட்ட போராட்டத்துக்குப் பிறகுதான் காளான் வளர்ப்புல உள்ள சூட்சமங்கள் பிடிபட்டுச்சு’’ என்ற கெளரி, பாலிதீன் பைகளில் வைக்கோலை அடைத்துக் கொண்டே பேச்சைத் தொடர்ந்தார
“வெவ்வேறு ரகங்கள்ல உற்பத்தி பண்ண காளானின் முதல் அறுவடையை எங்க பகுதி மக்களுக்குதான் கொடுத்தேன். காளான்கள் பல்வேறு நிறங்கள்ல இருந்ததால செயற்கை கலர் எதுவும் பயன்படுத்திருக்கோம்னு நினைச்சு வாங்குறதுக்கு மக்கள் தயக்கம் காட்டுனாங்க. இது காளான்ல ஒரு ரகம்னு ச�ொல்லிப் புரியவெச்சதும் வாங்கினாங்க. அடுத்தபடியா கடைகளுக்கு, வீடுகளுக்குனு விற்பனை பண்ண ஆரம்பிச்சேன். அப்புறம் மக்களே எங்க வீடு தேடி வந்து வாங்க ஆரம்பிச்சாங்க. பிசினஸ் ஆரம்பிச்ச முதல் அஞ்சு வருஷம் வரை விதைகளை வெளியே இ ரு ந் து தான் வ ாங்கிட்டு இருந்தேன் . 2021-லேருந்து விதைகளையும் நானே உற்பத்தி பண்ண ஆரம்பிச்சேன். அரசாங்கத்து லேருந்து ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டம் மூலமா கடனுதவி கிடைச்சுது. அதனால் சில மெஷின்களை வாங்கி தொழிலை விரிவு படுத்தினேன்.
எங்க பகுதியில் உள்ள வேளாண் அறிவியல் மையம் மூலமா காளான் வளர்க்க விரும்புறவங் களுக்கு காளான் உற்பத்தி வகுப்பு பயிற்சிகள் எடுக்குற வாய்ப்பும் எனக்கு கிடைச்சுது. என்கிட்ட பயிற்சி பெற்ற 50-க்கும் மேற்பட்ட வ ங்க இன்னிக்கு காளான் உற்பத்தியை தங்களோட பிசினஸாக மாத்தி யிருக்காங்க. அவங்களுக்கு உ ற்பத் தி மட்டுமில ்லா ம , விற்பனை, மார்க்கெட்டிங் போன்றவற்றுக்கும் உதவுறேன். உபரி காளான்களை பிஸ்கட், ஊறுகாய், சூப் மிக்ஸ்னு மதிப்புக் கூட்டல் செஞ்சும் விற்பனை பண்ணிக்கிட்டு இருக்கோம
என்னோட பண்ணையில் இப்போ ஒரு நாளைக்கு 15 கிலோவிலேருந்து 20 கிலோ வரை காளான் உற்பத்தி பண்றேன். ஒரு கிலோ காளான் 200 ரூபாய் வரை விலை போகுது. என் கணவரும் என்கூட சேர்ந்து காளான் வளர்ப்பு பிசினஸ்தான் பண்றாரு. வீட்டிலிருந்தே, குழந்தைகளையும் பார்த்துக் கிட்டு மாசம் 80,000 ரூபாய் வரை சம்பாதிக் கிறேன். உழைக்கத்தயாரா இருந்தா அதுக்கேத்த கூலி நிச்சயம் கிடைக்கும்’’ என்று கெத்தாக சொல்கிறார் கௌரி