திருவாரூர் மாவட்டம், கீரங்குடி கிராமத்தில் வசித்து வரும் என் பெயர் திலீப் (வயது 21). 12ஆம் வகுப்பு வரை படித்துள்ள நான். தனியார் கல்லூரியில் பொறியியியல் படித்து முடித்த பிறகு வேலை இல்லாமல் மிகவும் சிரமப்பட்டேன். அப்போதுதான் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வழிகாட்டுதலில் செயல்படும் செயல்தீனதயாள் உபாத்தியாய கிராமப்புற திறன் பயிற்சித் திட்டத்தின் (DDU-GKY) மூலம் Capital Educational and Charitable Trust நிறுவனத்தில் வேலை உத்திரவாதத்துடன் பயிற்சி அளிப்பதை அறிந்தேன். உடனடியாக எனது கல்வி சான்றுகளுடன் அந்த நிறுவனத்தை அணுகினேன். எனது சான்றுகளை சரிபார்த்த பிறகு உறைவிட வசதியுடன் கூடிய பயிற்சியில் சேர்ந்தேன். பயிற்சி முடிந்தவுடன் பெருங்குடியில் உள்ள Mi-Tech Bus Doors எனும் நிறுவனத்தில் CNC - Setter Cum Operator பணியில், மாதம் ரூபாய் 22.000 ஊதியத்தில் நிரந்தர பணியில் அமர்த்தப்பட்டேன்.

எனக்கு கிடைத்த பணி வாய்ப்பினால், என் ஊதியத்தை ஒரு பகுதியை என் குடும்பத்திற்கு அனுப்பி வைக்க முடிகிறது. நான் இப்போது மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளேன். என் நண்பர்கள் பலருக்கு தீனதயாள் உபாத்தியாய கிராமப்புற திறன் பயிற்சித் திட்டம் குறித்தும், அவற்றின் மூலம் பல்வேறு நிறுவனங்களில் தரும் பயிற்சிகள் குறித்தும் தெரிவித்து உள்ளேன். அதில் ஒரு சிலர் பயிற்சியில் சேர்ந்து உள்ளனர், இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்திற்கும், தீனதயாள் உபாத்தியாய கிராமப்புறத் திறன் பயிற்சித் திட்டத்திற்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும்

என் பெயர் வினோதினி மணிவண்ணன். பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் கிராமத்தில் கடந்த 25 ஆண்டுகளாக குடும்பத்துடன் வசித்து வருகிறேன். என் கணவர் எலக்ட்ரிசியன் வேலை செய்து வந்தார். எனது மகள் MBA படித்துள்ளார். எனது மகன் BE படித்து வருகிறார். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த நான், என் கணவரின் குறைந்த அளவு வருவாயைக் கொண்டு குடும்பத்தை சிரமத்துடன் நடத்தி வந்தேன். இந்நிலையில் இருந்து மாறுவதற்கும், வாழ்வாதாரத்தை பெருக்குவதற்கும் சுய தொழில் செய்து வருமானம் ஈட்டலாம் என்ற எண்ணமும் விடாமுயற்சியும் என்னுள் ஏற்பட்டது.

இந்நிலையில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் இயங்கும் இசையருவி மகளிர் சுய உதவிக் குழுவில் சேர்ந்தேன். அக்குழுவில் இருந்து வங்கி நேரடிக் கடன் பெற்று அதனுடன் நண்பர்களிடம் சிறிது கடன் பெற்று, அதில் தையல் இயந்திரம் வாங்கி கிராமத்தில் உள்ள பெண்களுக்குத் துணி தைத்து தந்து வருமானம் ஈட்டி வந்தேன். ஆனாலும் போதுமான வருவாய் கிடைக்கவில்லை. ஆகையால் அழகு நிலையம் வைத்து வருமானம் ஈட்டலாம் என்று தோன்றியது.

அச்சமயத்தில் பெரம்பலூர் IOB வங்கியின் (REST) கிராமப்புற சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் மூலம் அழகு கலை சம்பந்தமான பயிற்சி பெற்றேன். தற்பொழுது பாடாலூர் ஊராட்சியிலேயே சிறிய அளவில் பெண்களுக்கான அழகு நிலையம் மற்றும் தையல் கடை நடத்தி வருகிறேன். எனவே, தொழிலை மேம்படுத்த ஆலத்தூர் வட்டார வணிக வள மையத்தின் மூலம் குறைந்த வட்டியில் ரூ.50,000/ சமுதாய தொழில் நிதி பெற்று. அதனைக் கொண்டு. அழகு நிலையத்திற்குத் தேவையானப் பொருட்கள் மற்றும் தையல் தொழிலுக்குத் தேவையான உபகரணங்களை வாங்கி தற்போது எனது தொழிலை நல்ல முறையில் நடத்தி வருகிறேன். தற்பொழுது நான் மாதம் ரூ.25,000/- முதல் ரூ.30,000/- வரை வருமானம் ஈட்டி, குடும்ப செலவுகள் மற்றும் படிப்புச் செலவிற்கு போக மீதி மாதம் ரூ.5,000/- வரை சேமித்து வருகிறேன். எனது வாழ்வாதார வளர்ச்சிக்கு உதவிய தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்திற்கு எனது தொ வித்துக் கொள்கிறேன். நன்றிகளைத்

மேலும்

விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஊராட்சி ஒன்றியம், சாலை அகரம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் உள்ள தென்றல் மகளிர் சுய உதவிக்குழு மற்றும் தென்னமாதேவி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் உள்ள மகளிர் முன்னேற்ற சங்க கய உதவிக் குழு (MMS-6) ஆகிய குழுக்களின் உறுப்பினர்கள் களிமணணில் பல்வேறு பொம்மைகள், கைவினைப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் அழகு சாதனப் பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.2016ஆம் ஆண்டு துவக்கப்பட்ட தென்றல் மகளிர சுய உதவிக் குழுவானது மகளிர் திட்ட சமுதாய முதலீட்டு நிதி, வங்கிக கடன் ரூ.2 இலட்சம் மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்ட நிதி ரூ.150 இலட்சம் பெற்று தங்களின் தொழிலை விரிவுபடுத்தி வருகின்றனர்.

2005ஆம் ஆண்டு துவக்கப்பட்ட தென்னமாதேவி மகளிர் முன்னேற்ற சங்க சுய உதவிக் குழு (MMS- 6) வங்கிக் கடன் ரூ.2 இலட்சம் மற்றும் சமுதாய முதலீட்டு நிதி உதவி பெற்று தங்கள் தொழிலை மேம்படுத்தி வருகின்றனர்.

ஆரம்பத்தில் சுடுமண் மூலமாக பொம்மைகள் செய்து விற்பனை செய்து வந்த இக்குழுக்கள் ர அய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் (RSETI) மூலமாக பயிற்சி பெற்று கலைநயமிக்க பல்வேறு வண்ணங்களில் மண்பாண்ட பொம்மைகள் மற்றும் கைவினைப் பொருட்களை உற்பத்தி செய்து உள்ளூர் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களுக்கும் விற்பனை செய்வதோடு, ஆஸ்த்ரேலியா, களடா மற்றும் லண்டன் போன்ற வெளிநாடுகளுக்கும் தங்களின் தயாரிப்புப் பொருட்களை ஏற்றுமதி செய்கின்றனர்.

இக்குழுக்கள் தயார் செய்யும் பொம்மைகள் மற்றும் கைவிளைப் பொருட்களுக்கு மகளிர் திட்டத்தின் வாயிலாக உள்ளூரிலும், மாநில அளவில் விற்பனை கண்காட்சியிலும் மற்றும் பிற மாநிலங்களில் நடத்தப்படும் சாராஸ் உள்ளிட்ட கண்காட்சியிலும், விற்பனை வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது இக்குழுக்களின் உறுப்பினர்கள் மாதந்தோறும் கணிசமான வருவாய் பெற்று பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர். தங்களின் வாழ்வாதார வார்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்திற்கு தென்றல் மகளிர் சுய உதவிக் குழு மற்றும் மகளிர் முன்னேற்ற சங்க சுய உதவிக் குழு (MMS-6) ஆகிய சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்கள் தங்களின் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.

மேலும்

திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி ஒன்றியம், எலவம்பட்டி கிராமத்தில் செல்லியம்மன் குழு கடந்த 2014 ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இக்குழுவின் உறுப்பினர்கள் 6 நபர்கள் இணைந்து கோரை புல் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களுக்கான தயாரிப்பு பயிற்சியில் கலந்து கொண்டோம்.

இத்தொழிலை மேற்கொள்ள ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் சமுதாய முதலீட்டு நிதியிலிருந்து ரூ.1,00,000/- மற்றும் வங்கி கடனாக ரூ.5,00,000/ பெற்று கோரை புற்களை கொண்டு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத கோரை பை, நகை பெட்டகம், புடவைப் பெட்டி, பரிசுப் பெட்டி மற்றும் டீ கப் விரிப்பு போன்றவற்றை தயாரித்து விற்பனை செய்வதன் வாயிலாக ஒவ்வொரு உறுப்பினருக்கும் ரூ.9,000/- வரை மாத வருமானமாக கிடைக்கிறது. இந்தப் பொருட்களைத் தயாரிப்பதன் வாயிலாக குழு உறுப்பினர்களின் வாழ்வாதாரம் உயர்ந்து சுற்றுசுழலும் பாதுகாக்கப்படுகிறது. தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திய தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்திற்கு செல்லியம்மன் குழுவின் உறுப்பினர்கள் தங்களின் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.

மேலும்

தென்காசி மாவட்டம். புளியங்குடி நகராட்சியில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்தின் வழிகாட்டுதலில் அஷ்டலட்சுமி மகளிர் சுய உதவிக் குழு செயல்பட்டு வருகிறது. இக்குழுவில் உறுப்பினர்களாக உள்ள 12 பெண்கள் நெசவுத் தொழிலை மேற்கொண்டு வந்தனர். போதிய வருவாய் இல்லாத நிலையில் அனைவரின் குடும்பத்திலும் வறுமை நிலவி வந்தது. இந்த நிலையில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்தின் SEP-G திட்டத்தின் கீழ் வங்கிக் கடனாகரூ. 6 இலட்சம் அஷ்டலட்சுமி மகளிர் சுய உதவிக் குழுவிற்கு வழங்கப்பட்டது. இந்தத் தொகையைக் கொண்டு தங்களின் தொழிலுக்குத் தேவையான மூலப்பொருட்களை வாங்கி தற்போது நெசவுத் தொழிலை சிறப்பாக மேற்கொண்டு முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்.

தங்களுக்கு கடன் வழங்கி, தொழிலை சிறப்பாக மேற்கொள்ள உதவிய தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்திற்கு அஷ்டலட்சுமி மகளிர் சுய உதவிக் குழுவின் உறுப்பினர்கள் தங்களின் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.

மேலும்

நான் தஞ்சாவூர் மாவட்டம் புன்னைநல்லூர் கிராமத்தில் இருந்து எனது வாழ்வாதார மேம்பாட்டிற்காக அருகாமையில் செயல்பட்டு வந்த தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை தயாரிக்கும் இடங்களில் கூலி வேலைக்கு சென்று வந்தேன். அத்தகைய வருமானம் எனது குடும்பத்தின் வறுமையை குறைக்க போதுமானதாக இல்லை. தனியார் நுண்நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் வாங்கியே காலத்தை கடத்திக் கொண்டிருந்தேன், இத்தகைய சூழ்நிலையில் 2011 ஆம் ஆண்டு புன்னைநல்லூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் உதவியுடன் அமைக்கப்பட்ட செம்பருத்தி மகளிர் சுய உதவிக்குழுவில் ஒரு உறுப்பினராக இணைந்தேன்.

நான் செம்பருத்தி மகளிர் சுயஉதவிக்குழுவில் இணைந்த பின்னர் குழுவின் மூலமாக உள்கடனாக மூன்று முறை தலா ரூ.20,000/- பெற்று அத்தொகையினை கொண்டு தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை தயாரிக்க கூலித் தொழிலாளியாக சென்றபொழுது கற்றுக்கொண்ட அனுபவத்தின் அடிப்படையில் நான் சுயமாக தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை உற்பத்தி செய்யும் தொழில் செய்யத் துவங்கினேன்.

இப்பொம்மைகள் தயாரிக்க தேவையான அடிப்படை மூலபொருட்களான (Raw Materials) சுண்ணாம்பு தூள் (Chalk Powder) மற்றும் காகித தூள் (Paper Powder) ஆகியவற்றை கடலூர் மாவட்டத்திலிருந்து கொள்முதல் செய்து தலையாட்டி பொம்மைகளை நான் தயாரித்து வருகிறேன்.

என்னுடைய தொழிலில் எனது கணவரும், குடும்ப உறுப்பினர்களும் உறுதுணையாக இருந்ததால் அதிகளவில் பொம்மைகள் தயாரிக்க முடிந்தது. நாளொன்றிற்கு ஒரு நபருக்கு 15 பொம்மைகள் வீதம் குழு உறுப்பினாக்ளை கொண்டு 60 பொம்மைகள் தயாரித்து வருகின்றேன் டான்சிங் டால், தலையாட்டிப் பொம்மை, செட்டியார், பொம்மைகள் போன்ற வகைகள் மிகவும் பிரசித்திப் பெற்றவை.

தலையாட்டி பொம்மை ரூ.40/-க்கும், டான்சிங் டால் ஜோடி ஒன்று ரூ.150/-க்கும் தஞ்சை மாவட்டத்திலுள்ள மதி விற்பனை அங்காடிகளிலும் (தஞ்சை தாரகைகள்) மற்றும் தஞ்சை இரயில் நிலையத்தில் புதிதாக துவக்கப்பட்டுள்ள ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு (One Station, One Product) நிலையத்திலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையத்தில் விற்பனை நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஒரு நாளைக்கு ரூ.1000/- முதலீடு செய்து ரூ.900/- வரை இலாபம் ஈட்டி வருகிறேன். இதன் மூலம் ஒரு வருடத்திற்கு ரூ.1.50 இலட்சம் வருமானம் வருகிறது.

ஒரு வாரத்திற்கு சராசரியாக தஞ்சை தாரகை விற்பனை அங்காடிகளில் 1,00,000/- தலையாட்டி பொம்மைகளும் மற்றும் தஞ்சை இரயில் நிலையத்தில் செயல்பட்டு வரும் விற்பனை நிலையத்தில் 25,000/- பொம்மைகளும் விற்பனை ஆகின்றது. வருடத்திற்கு ரூ.1.50 இலட்சம் எனக்கு வருமானம் வருகிறது. என்னுடைய வாழ்வாதாரம் உயர்வதற்கு காரணமாக இருந்த தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்திற்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும்

நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் தொகுதி சிவன் கீழவீதி வலிவலத்தில் வசிக்கும் நான் ஜி.செல்லா w/o குருமூர்த்தி. எனது சுய உதவிக் குழுவின் பெயர் ஸ்ரீ தோபாடி சக்தி மகா காளியம்மன், இது 2007 இல் உருவாக்கப்பட்டது. கனரா வங்கி வலிவலம் கிளையில் இதுவரை 5 கடன்களைப் பெற்றுள்ளோம். 5வது வங்கிக் கடனின் கடைசி தொகுப்பில் நாங்கள் மொத்தம் ரூ.9,50,000 பெற்றோம், எனக்காக ரூ. அதிலிருந்து 88600/- கிடைத்தது.

எனது கணவருக்கும் எனக்கும் வேலையில்லாத் திண்டாட்டத்தால் எனது குடும்ப வருமானம் மிகவும் குறைவாக இருப்பதால், அன்றாட வாழ்க்கைப் பொருட்களைக் கூட குடும்பத்தை நடத்த முடியாமல் திணறி வருகிறேன். நான் சுய உதவிக்குழுவில் இணைந்த பிறகு ஆடு வளர்ப்புக்கான சுய உதவிக்குழுவின் உள்கடன் மூலம் எனது வாழ்வாதார நடவடிக்கையை தொடங்கினோம். ஒவ்வொரு வங்கிக் கடனிலும் ஆடுகளின் எண்ணிக்கையை படிப்படியாக அதிகரித்து, தற்போது வாழ்வாதார நடவடிக்கை ஆடு பயிற்சியை மேம்படுத்தியுள்ளோம்.

இப்போது ஆடு வளர்ப்பின் மூலம் மாதம் ரூ.5500/- வருமானம் பெறுகிறேன். தற்போது நான் பொருளாதார ரீதியில் வலுவடைந்துள்ளேன் என்றும் எனது கணவருடன் எனது குடும்பத்திற்கு சமமான பங்களிப்பை வழங்கியுள்ளதாகவும் பெருமையுடன் கூறுகின்றேன். உண்மையில் மகளிர் திட்டம் மற்றும் கனரா வங்கி வலிவலம் கிளைக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

மேலும்

சுயமாக தொழில் செய்ய தயங்கியவர் தன்னுடைய பாரம்பரியத் தொழிலான மரச் செக்கு எண்ணெய் தொழில் செய்து வாழ்வாதாரத்தை உயர்த்தி உள்ளார் திருவாரூர் மாவட்டம். திருத்துறைப்பூண்டி வட்டாரம், வேளூர் ஊராட்சியில் வசிக்கும் ஷோபனா. எனது கணவரின் உதவியுடன் மரச் செக்கு இயந்திரம் மற்றும் மூலப் பொருட்களை வாங்கி எண்ணெய் எடுத்து விற்பனை செய்ய ஆரம்பித்தேன். தரமான எண்ணெயாக இருப்பதால் நான் உற்பத்தி செய்யும் எண்ணெயை அனைவரும் வாங்க ஆரம்பித்தனர். இதனால எனக்கு நல்ல வருமானம் கிடைக்க ஆரம்பித்தது. எனது குடும்பத்தின் வறுமையும் குறைய ஆரம்பித்தது.

தொழில் நன்றாக நடந்ததால் கூடுதலாக ஒரு இயந்திரம் வாங்கி மேலும் தொழிலை விரிவுபடுத்தலாம் என்று முடிவு செய்தேன். திருவாரூர் மாவட்ட மகளிர் திட்டத்தின் வழிகாட்டுதலில் எனக்கு மானியத்துடன் கூடிய கடனாக 2 இலட்சம் ரூபாய் கிடைத்தது. அதைக் கொண்டு எனது தொழிலை விரிவுப்படுத்தினேன். நான் தயாரிக்கும் எண்ணெயை டெல்டா விவசாயி என்ற பெயரில் விற்பனை செய்ய ஆரம்பித்தேன். அதன் மூலம் எனக்கு மாதம் ரூ.15.000/- வரை வருமானம் கிடைக்கத் தொடங்கியது.

இந்த சமயத்தில் எனது வாடிக்கையாளர்கள், மாவு அரைத்து விற்பனை செய்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார்கள்.நானும் அதற்கான இயந்திரங்கள் மற்றும் மூலப் பொருட்கள் வாங்க மீண்டும் மகளிர் திட்டம் மூலம் கடன் வாங்கி, தற்போது மாவு அரைத்து விற்பனை செய்து அதன் மூலமும் வருவாய் பெற்று வருகிறேன்.

சாதாரண பெண்ணாக இருந்த என்னை இன்று தொழில் முனைவோராக்கிய தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்திற்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும்

வணக்கம். என்னுடைய பெயர் ஸ்னேகா. நான் நரிக்குறவர் இனத்தை சேர்ந்தவள். நானும் என்னுடைய இனத்தைச் சேர்ந்தவர்களும் திருப்பெரும்புதூர் ஊராட்சி ஒன்றியம். நெமிலி ஊராட்சி, காரந்தாங்கல் என்ற கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். இப்பகுதியில் மொத்தம் 44 நரிக்குறவர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். நாங்கள் நாடோடிகளாக சுற்றித் திரிந்து பாசிமணியில் செய்யப்படும் மணிமாலைகள், சோப்பு, சீப்பு மற்றும் பலவிதமான பொருட்களையும் திருப்பெரும்புதூர் பேருந்து நிலையத்திலும் மற்றும் அருகாமையில் உள்ள ஊர்களுக்கு சென்று திருவிழா நடைபெறும் இடங்களிலும் விற்பனை செய்து வந்தோம்.

எங்களுக்கு சொந்தமாக எங்கள் பொருட்களை விற்பனை செய்ய ஒரு இடம் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தோம். நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த 20 நபர்கள் ஒன்று சேர்ந்து மகளிர் திட்டத்தின் வழிகாட்டுதலின்படி ஒருசுய உதவிக்குழுவை ஆரம்பித்தோம். அக்குழுவில் உள்ள எங்களுக்கு குன்றத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புதிய ரக ஆபரணங்கள் தயாரிக்க 15 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.

இரண்டாம் கட்டமாக மகளிர் திட்டம், நபார்டு வங்கி மற்றும் ரீட்ஸ் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து கழிவு பட்டு நூலினால் ஆன வளையல்கள் மற்றும் ஆபரணங்கள் செய்ய பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் சீரிய முயற்சியால் எங்கள் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய மகளிர் திட்டத்தின் மூலம் திருப்பெரும்புதூர் ஊராட்சி ஒன்றிய பேருந்து நிலையத்திலுள்ள வணிக வளாக கடை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்திலுள்ள பட்டு சேலை விற்பனை செய்யும் கடை உரிமையாளர்கள் நாங்கள் உற்பத்தி செய்யும் ஆபரணங்களை கொள்முதல் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர். மேலும் கூட்டுறவுத் துறையின் மூலமாகவும்,துணிநூல் (ம) கைத்தறி அலுவலகம் மூலமாகவும் கழிவு பட்டு நூல்களை எங்களுக்கு இலவசமாக வழங்கிட மகளிர் திட்டத்தின் மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

வேற்று மாநிலங்கள் மற்றும் வேறு மாவட்டங்களில் நடைபெறும் சாராஸ் கண்காட்சிகளிலும் எங்கள் நரிக்குறவர் இன மக்கள் உற்பத்தி செய்யும் ஆபரணங்கள் விற்பனை செய்யப்பட்டு எங்களின் வாழ்வாதாரம் சிறக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் எங்களுக்கு திருப்பெரும்புதூர் பேருந்து நிலையத்திலே உள்ள வணிக வளாகத்தில் ஒரு கடையினை திறந்து வைத்து எங்கள் உற்பத்தி பொருட்களை அந்த இடத்தில் விற்பனை செய்ய வழிவகை செய்துள்ளார். இதனால் எங்கள் வாழ்க்கைத்தரம் உயர்ந்து வருகிறது.

மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அய்யா அவர்களுக்கும், எங்களது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கும், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டிற்கும் எங்களின் நரிக்குறவர் மகளிர் குழுவின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும்

Page 2 of 3, showing 9 record(s) out of 22 total