“நாங்க யாரும் பெருசா படிக்கல. அதனால தறி ஓட்டிக் கிடைச்ச வருமானத்துல வாழ்க்கை நடத்திட்டிருந்தோம். தினம் மூணு வேளை சாப்பாடு கிடைக்கிறதே பெரிய விஷயமா இருந்துச்சு. ஆசைப்படுற சின்ன பொருளைக் கூட வாங்க முடியாது. இப்படியான சூழ்நிலை யில இருந்த எங்களுக்கு 2002-ல மகளிர் சுய உதவிக்குழு பத்தி தெரிய வந்துச்சு. பத்து பெண்கள் ஒண்ணா சேர்ந்து குழுவை ஆரம் பிச்சோம். குழுவுல சேர்ந்ததும் 25,000 ரூபாய் கடன் உதவி கிடைச்சுது. அந்தப் பணத்துல காய்கறி வியாபாரம் தொடங்கினோம். அப் புறம் மெத்தைகளுக்கான கவர்கள் தயாரிச்சு விற்க ஆரம்பிச்சோம். இப்படி சீசனுக்கு தகுந்த மாதிரி வேற வேற தொழில்களைப் பண்ணிட் டிருந்தோம். நிரந்தர வருமானம் இல்லை. அப்பதான் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சணல் பைகள், அலங்காரப் பொருள்கள் தயாரிக்கிறதுக்காக அரசாங்கம் கொடுத்த பயிற்சி வகுப்புகள்ல கலந்துகிட்டு பயிற்சி எடுத்துக்கிட்டோம். அரசாங்கத்துலேருந்து ரெண்டு லட்ச ரூபாய் கடன் உதவி கிடைச்சுது. அதை வெச்சு ரெண்டு தையல் மெஷின்கள் வாங்கி சணல்பைகள் தயாரிக்க ஆரம்பிச்சோம்’’ என்ற குழு உறுப்பினர் முத்துலட்சுமியைத் தொடர்ந்து, சணல் பைகள் தயாரிப்பு முறை பற்றி பேச ஆரம்பித்தார் கிருபா.
“சென்னை, கொல்கத்தாவுல இருந்த மெட்டீரியல்கள் வாங்கு றோம். ஆரம்பத்துல நாங்க தைச்ச பைகளைத் தூக்கிக் கிட்டு நிறைய கடைகள் ஏறி இ ற ங் கியிருக்கோ ம் . ஸ ்டா ல்கள் போ ட் டு விற்பனை செஞ்சோம். எங்க தயாரிப்புகள் பத்தி வெளி மாவட்டங்களுக்கும் தெரிய ஆரம்பிச்சுது. இப்போ 750 வகையான பொருள்களை டிசைன் பண்றோம். 30 ரூபாய் லேருந்து 700 ரூபாய் வரைக் கும் எங்ககிட்ட பொருள்கள் இருக்கு. கடைகள், திருமண வீ டு க ள், க ா ர்ப்பரே ட் நிறுவனங்கள்னு நிறைய பேர் நாங்க தயாரிக்கிற பொருள் களை வாங்கறாங்க’’ என்று கிருபா முடிக்க, குழுத்தலைவர் அமலோற்பவமேரி பேச ஆரம்பித்தார்.
“எங்களுக்குனு இப்போ தனி யூனிட் இருக்கு. நிறைய ஆர்டர்கள் வரும்போது எங்க ஊர் ஆண்களுக்கும் நாங்க வேலை வாய்ப்பு தர்றோம். துணி ஆர்டர் போடுறது, கட் பண்றது, தைக்கிறது, பிரின்ட் பண்றது, ரன்னர் போடுறது, ஸ்டால் போடுறதுன்னு யாருக்கு என்னவேலைதெரியுமோ அதைப்பண்ணிட்டி ருக்கோம். ஆர்டர் பொறுத்து மாசத்துக்கு குறைஞ்சது 2 லட்சத்துல இருந்து ஏழு லட்சம் ரூபாய் வரை டர்ன் ஓவர் பண்றோம். எங்க பிள்ளைகளைப் படிக்க வெச்சுருக்கோம். குடும் பத்துக்கு பாரமா இருக்கோம்னு கவலைப்பட்ட நாங்க இன்னிக்கு குடும்பத்தோட பாரத்தை தூக்கிச் சுமக்குற நிலைமைக்கு வந்துருக்கோம். தன்னம்பிக்கையோட போராடினா போதும். நல்லதெல்லாம் தானா நடக்கும்.’’