மக்கள் நிலை ஆய்வின் போது மாற்றுத்திறனாளி மற்றும் நலிவுற்றோர் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு நலிவுற்றோர் மேம்பாட்டு நிதியாக ரூ.10,000/- முதல் ரூ.25,000/- வரை தனிநபர் கடனாக வழங்கப்பட்டு வருகிறது. நலிவுற்றோருக்கான நிதியானது மாற்றுத்திறனாளிகளின் உணவுப் பாதுகாப்புக்கும், வாழ்வாதார செயல்பாடுகளுக்கும், உடல் நலக்குறைவு அல்லது எதிர்பாரா மருத்துவ செலவிற்கும் மற்றும் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டோரின் மறுவாழ்விற்கும் பயன்படுத்தப்படுகிறது

மேலும்

தமிழ்நாடு மாநில அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்களின் ஆதார மையம் (TNVRC) 2001 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இச்சங்கம் தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் 1975-ன் கீழ் பதிவு செய்யப்பட்டதாகும். இம்மையம் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் ஓர் அங்கமாகச் செயல்பட்டு வருகிறது. இச்சங்கத்தின் முக்கிய நோக்கமாக, திட்டப் பணியாளர்கள், சமுதாயம் சார்ந்த அமைப்புகள் மற்றும் மாநில / மாவட்ட / வட்டார அளவிலான முதன்மைப் பயிற்றுநர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி வழங்குதல், திட்டத்திற்கான பயிற்சி உபகரணங்கள் / கையேடுகள் மற்றும் பயிற்சி சார்ந்த பிற புத்தகங்கள் உருவாக்குதல், சமூக, பொருளாதார மேம்பாடு தொடர்பான சமுதாயம் சார்ந்த திட்டங்களை செயல்படுத்துதல் மற்றும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தால் செயல்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்களின் நடவடிக்கைகளின் சிறந்த முயற்சிகள், உத்திகள், படிப்பினைகள் மற்றும் விளைவுகளுக்கான அறிவுசார் மையமாக செயல்படுதல் ஆகும்.

மேலும்

தேசிய ஊரகப் பொருளாதார புத்தாக்கத் திட்டம் ஒன்றிய ஊரக வளர்ச்சி அமைச்சகத்தால் 2019-20 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு நிதியானது ஒன்றிய மாநில அரசுகளால் 60:40 என்ற விகிதத்தில் பங்களிப்பு செய்யப்படுகிறது. இத்திட்டத்தின் வாயிலாக மிகவும் ஏழைகள் சார்ந்த தொழில் முதலீடுகளையும்

மேலும்

Page 1 of 1, showing 3 record(s) out of 3 total