DDU-GKY திட்டத்திற்கு நன்றி...

திருப்பூர் மாவட்டம். பெரிய வரப்பட்டி கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வரும் குணசேகரன். டிப்ளமோ மெக்கானிக்கல் படித்த பிறகும் உரிய வேலை வாய்ப்பு கிடைக்காததால், தனது தனது குடும்பத் தொழிலான தச்சு வேலையைத் செய்து வந்தார். அவருக்கு இயந்திர தொழில்நுட்பம் குறித்த எவ்வித தொழில் அனுபவமும் இல்லை. என்றாலும் தனது வேலை தேடலை அவர் நிறுத்தவே இல்லை. தனக்கென இயந்திர தொழில் நுட்பத் தொழிலைக் கற்றுக் கொள்வதற்கான வழியைத் தேடினார், அந்த நேரத்தில் அவர் வசித்து வரும் கிராமத்தில் செயல்படும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் பணியாளர்கள் மூலம் வேலை வாய்ப்புடன் கூடிய திறன் பயிற்சிகள் வழங்கும் தீனதயாள் உபாத்தியாய ஊரகத் திறன் பயிற்சித் (DDU (GKY) திட்டம் பற்றி அறிந்து கொண்டார்.

பின்னர் அவர்களின் வழிகாட்டுதலின்படி DMW கல்வி மற்றும் அறக்கட்டளையில் DDU-GKY திட்டத்தின் மூலம் CNC ஆபரேட்டர் பயிற்சியை கற்க தேர்வு செய்யப்பட்டார். இலவச உணவு மற்றும் தங்குமிடத்துடன் பயிற்சி பெற்ற குணசேகரன். பயிற்சிக்குப் பிறகு ஈரோட்டில் உள்ள DMW CNC சொல்யூஷன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் மாதம் ரூ.15,000/- ஊதியத்தில் பணிபுரிகிறார்.

தற்போது குணசேகரன் நவீன தொழில்நுட்ப இயந்திரமான NHX 6300 இயந்திரத்தை இயக்குகிறார். மேலும் இந்த வகை CNC மெஷின்கள் மூலம் தனது குடும்பத் தொழிலான தச்சு வேலையை உருவாக்க அவர் திட்டமிட்டு, அதற்காகத் தன்னை தயார்படுத்திக் கொண்டு வருகிறார். DDU- GKY திட்டத்தின் வேலை வாய்ப்புடன் கூடிய திறன் பயிற்சித் திட்டத்தின் மூலம் பயிற்சியும், தொழில் வாய்ப்பும் பெற்ற குணசேகர், தனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய DDU-GKY திட்டத்திற்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறார்.