ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் (RSETIs)
கிராமப்புற இளைஞர்களுக்கு பயிற்சியளித்து சுய வேலைவாய்ப்பை உருவாக்கிட ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட முன்னோடி வங்கிகள் வாயிலாக ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் (Rural Self Employment Training Institute – RSETIs) அமைக்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் தற்பொழுது 30 மாவட்டங்களில் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும், புதிதாக உருவாக்கப்பட்ட 6 மாவட்டங்களில் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் துவங்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேற்படி நிறுவனங்களுக்கான உட்கட்டமைப்பு நிதியும் கிராமப்புற ஏழைக் குடும்பங்களை சார்ந்த நபர்களுக்கு பயிற்சிக்கான செலவினத்தை ஊரக வளர்ச்சி அமைச்சகத்தால் வழங்கப்படுகிறது.
2022-23 ஆம் நிதியாண்டில் 26,259 நபர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டதில், 10,978 நபர்கள் வங்கி கடன் மற்றும் சொந்த முதலீடு மூலம் சுய தொழில் செய்து வருகின்றனர்.