கோவை தொப்பம்பட்டி கிராமத்தில் இருக்கிறது ‘விஜயலட்சுமி மெட்டல் செயின் ஒர்க்ஸ் தொழிற்சாலை’. ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் அடைக்கப்பட்ட அந்தத் தொழிற்சாலை யில் காப்பர் கம்பிகளை வளைப்பதும், க�ோப்பதுமாக கவரிங் செயின்கள் தயாரிக்கும் வேலைகள் மும்முரமாக நடக்கின்றன. தங்கம் மற்றும் அவரின் கணவர் தனபாலன் ஆகியோர் இந்தத் தொழிற்சாலை உரிமை யாளர்கள். சிறிய அளவில், வீட்டிலேயே கவரிங் நகைகளைத் தயாரித்து வந்தவர்கள் இன்று சொந்தமாக த�ொழிற்சாலை அமைத்து, லட்சங்களில் டர்ன் ஓவர் செய்கிறார்கள். கவரிங் செயின்களுக்கு வளையங்கள் தயாரித்த படியே பேச ஆரம்பித்தார் தங்கம
“சென்னையில எங்க அம்மா, வீட்ல மெஸ் வெச்சு நடத்திட்டு இருந்தாங்க. நான் ஆறாவது வரை படிச்சேன். அப்புறம் படிப்பு வரலைனு பள்ளிக்கூடத்துக்குப் போகாம மெஸ் வேலை களைப் பார்க்க ஆரம்பிச்சுட்டேன். மெஸ் வேலைகளையெல்லாம் முடிச்சு நைட் கணக்கு வழக்கு பார்ப்போம். அப்பல்லாம் ஒரு நாளைக்கு கையிருப்பு காசு எவ்வளவுனு ஆசையா கேட்டுத் தெரிஞ்சுப்பேன். ஏதாவது பிசினஸ் செய்யணுங்கிறது சின்ன வயசு லேருந்தே என்னோட ஆசை
கணவரும் படிக்கல. கல்யாணமானபோது என் வீட்டுக்காரர் கவரிங் நகை தயாரிச்சுட்டு இருந்தாரு. அவர்கிட்ட இருந்து நானும் கத்துக் கிட்டேன். ரெண்டு பேரும் சேர்ந்து சென்னை யில சின்ன அளவுல பிசினஸ் பண்ணிட்டு இருந்தோம். இதே தொழிலை என் கணவரோட சொந்தக்காரங்க கோவை பண்ணிட்டு இருந்தாங்க. அதனால சென்னையிலேருந்து க�ோயம்புத்தூர் வந்துட்டோம். வெறும் முப்பதாயிரம் ரூபாய் முதலீட்டுல எங்க பொண்ணு பேர்ல நிறுவனத்தை ஆரம்பிச் சோம். நகைகளை செஞ்சு நிறைய கடைகள்ல ஏறி இறங்கி ஆர்டர்கள் எடுத்தோம். இப்போ 15 பேர் எங்ககிட்ட வேலை செய்யற அளவுக்கு பிசினஸ் வளர்ந்திருக்கு’’ என்ற தங்கம், கவரிங் நகை தயாரிப்பு பற்றி பேச ஆரம்பித்தார்.
நாங்க முறுக்கு செயின் மாடல் தயார் பண் றோம். முதல்ல காப்பர் கம்பிகளை வாங்கிட்டு வந்து, அதைத் தட்டி வளையம் மாதிரி ஆக்குவோம். அந்த வளையத்தை ஒண்ணோடு ஒண்ணா கோர்க்கனம் . அப்புறம் துத்தநாகம், சல்ஃபர் கலந்த கெமிக்கல் பொடியில முக்கி எடுத்து காயவெச்சு, சமமாக்கி கவரிங் கடைகளுக்குக் கொடுத்துடுவோம் . அவங்க பாலிஷ் பண்ணி என்ன விலைக்கு வேணும் னாலும் வித்துப்பாங்க.
கொரோனா வந்து மூணு வருஷங்களுக்கு வாழ்க்கையையே புரட்டிப்போட்டுருச்சு. பல போராட்டங்களுக்குப் பிறகு இப்போதான் தொழில் திரும்ப சூடு பிடிக்க ஆரம்பிச்சுருக்கநுணுக்கமான வேலைங்கிறதால ஒரு நாளைக்கு 100 செயின்கள்தான் தயார் பண்ண முடியுது. அடிக்கடி பணநெருக்கடி வரும். எங்க ஏரியாவுல இருக்குற மகளிர் சுய உதவிக் குழுவுல சேர்ந்த பிறகு பண நெருக்கடி க�ொஞ்சம் குறைஞ்சுது. பல நேரங் கள்ல குழு உதவியோட தான் பிசினஸை நடத்த முடிஞ் சுது. ஒரு கட்டத்துல பிசின ஸ ை இ ன் னு ம் க � ொஞ்ச ம் டெவ ல ப் பண்ணலாம்னு நினைச் சப்போ யாருமே கடன் க � ொ டு க்க ல. எ ங்கே போனாலும் அடமானமா ஏதாவது கேட்டாங்க. அ ட ம ா னம் வைக்க பொருள் இருந்தா நாங்க ஏன் கடன் கேட்கப் போறோம்னு . வழி தெரி ய ா ம நின்னப ்ப தான் அ ர சாங்கத்த ோ ட ‘வாழ்ந்து காட்டுவ�ோம்’ திட்டம் மூலமா 33 சதவிகிதம் மானியத் த�ோட ரெண்டு லட்சம் ரூபாய் லோன் கிடைச்சுது. பிசினஸை க�ொஞ்சம் டெவலப் பண்ணோம். ஒரு மாசத்துக்கு 1,000 செயின்கள் தயாரிச் சுட்டு இருந்த நாங்க, இப்போ மாசம் 4,000 செயின்கள் தயார் பண்றோம்.
மாசம் ஒன்றரை லட்சம் டர்ன் ஓவர் பண்றோம். இத்தனை வருஷ வாழ்க்கையில என்னை உறுத்தற விஷயம், படிக்காமப் போனதுதான். ஒரு ஃபார்ம் நிரப்பணும்னா கூட யாரையாவது தேடணும். படிக்காதது னால நிறைய இடங்கள்ல பேசாம இருந் துருக்கேன். அதனாலயே ஆரம்பத்துல இருந்து எங்க பொண்ணுக்கு படிப்போட முக்கியத் துவத்தைச் சொல்லி வளர்த்தோம். அவளை எம்.எஸ்சி வரை படிக்க வெச்சுட்டோம். சொத்து எதுவும் இல்லைனாலும் எங்க மகளோட படிப்பு எங்களை நிச்சயம் காப்பாத்தி கரை சேர்த்துடும்”