“பெருசா படிக்கல... வயக்காட்டுல களையெடுக்குற வேலையைத் தவிர சம்பாதிக்க வேற வழி தெரியாம ஆடு, மாடுகளை மேச்சுகிட்டுத் திரிஞ்சிட்டிருந்தோம். அம்பது, நூறு சம்பா தி ச்சா வீட்டு செ லவுக் கு ஒத்தாசையா இருக்கும்னு கிடைச்ச வேலைகளை பண்ணிட்டு இருந்த நாங்க எல்லாரும் இப்போ தொழிலதிபர்கள். 78 முதலாளிகளைக் கொண்டது எங்க பிசினஸ். ஒவ்வொருத்தரும் மாசம் ஐம்பதாயிரம் ரூபாய்க்கும் மேல சம்பாதிக்கிறோம். எங்க முயற்சி எங்க வாழ்க்கையை மாத்தியிருக்கு. அதுக்கான ஆரம்ப புள்ளி இந்தப் பெண்கள் படைதான்” - தன் குழு உறுப்பினர்களை காட்டியபடியே பேசுகிறார் பிரியதர்ஷின
நாமக்கல் மாவட்டம் சப்பையாபுரம் கிராமத்தைச் சேர்ந்த, ‘சப்பையாபுரம் வுமன்வீவர்ஸ் கிளஸ்டர்’ குழுவினர் இவர்கள். 100 ரூபாய் சம்பளத்துக்கு விவசாயக்கூலிகளாகவும், பவர்லூம் கூலிகளாகவும் இருந்தவர்கள், இன்று நாள் ஒன்றுக்கு 2,000 ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கிறார்கள். பெண்கள் ஒன்று சேர்ந்தால் அற்புதங்களை நிகழ்த்த முடியும் என்பதற்கு, தங்களின் வாழ்க்கையை முன்னுதாரணமாக வைத்தே பேச ஆரம்பித்தனர்
டவைகளை வெளிமாநிலங்களுக்குக்கூட விற்பனைக்கு அனுப்புறோம். இந்த இடத்தைப் பிடிக்க பல அவமானங்களை சந்திச்சிருக்கோம். எங்கள்ல பல பேருக்கு பேங்க் பத்தி தெரியாது, லோன் பத்தி தெரியாது, சிலருக்கு கையெழுத்துகூட போடத் தெரியாது. இதை எல்லாம் மாத்தி தொழிலதிபர்னு அங்கீகாரத்தோட வாழ ஆரம்பிச்சிருக்கோம். இதுக்குப்பின்னாடி உழைப்பையும் நம்பிக்கையையும் தவிர எதுவுமே இல்ல” என்று திலகம் முடிக்க, பிசினஸ் தன் வாழ்க்கையை மாற்றியது குறித்து பேச ஆரம்பித்தார் மற்றோர் உறுப்பின ரான பிரியதர்ஷினி.
‘`எனக்கு எட்டாவது படிச்சு மு டி ச்ச வு டனே க ல ்யாணம் ஆயிருச்சு. திருமணம் முடிஞ்சப்போ எங்க வீட்டுக்காரர் பவர் லூம்ல கூலி வேலை பார்த்துட்டு இருந்தாரு. நான் விவசாயக் கூலியா வேலைக்குப் போக ஆரம்பிச்சேன். மகளிர் சுயஉதவிக் குழுவுல சேர்ந்தா குறைஞ்ச வட்டிக்கு நாலாயிரம் ரூபாய் கடன் தர்றதா சொன்னாங்கனு குழுவுலசேர்ந்தேன். அது என் வாழ்க்கையை மாத்தும்னு அப்போ நினைக்கல. அப்புறம் தொலைதூரக் கல்வியில படிப ்பை த் தொட ர ்ந்தே ன் . இப்போ நான் எம்.பி. ஏ பட்டதாரி. எங்க ஊர்ல வெவ்வேறு குழுக்கள்ல இருந்த பெண்களுக்கு அரசாங்கத்துல இருந்து பவர்லூம்ல புடவை நெய்யுறதுக்கான பயிற்சி கொடுத்தாங்க. பயிற்சி எடுத்துக்கிட்டு தினக்கூலிகளா பவர்லூம் வெச்சிருந்தவங்ககிட்ட வேலைக்குச் சேர்ந்தோம். தினமும் 200- 300 ரூபாய் சம்பளமா கிடைச் சுது. சில வருஷங்கள்ல குழுக்கள் மூலமாவே மானியத்தோட வங்கிக்கடன் கிடைச்சுது. ஒவ்வொருத்தரும் அவங்கவங்க வீடுகள் லயே ரெண்டு தறி போட்டோம்.
கூலி வேலை பார்த்துட்டு இருந்தவங்க முதலாளி ஆனோம். எங்க கணவர்களையும் முதலாளி ஆக்கினோம். வீட்டுல சொந்தத் தறி போட்ட பிறகு ஒவ்வொருத்தரும் ஒரு நாளைக்கு நாலு புடவைகள் நெய்ய முடிஞ்சுது.
எங்களோட புடவைகளை மற்ற வியாபாரிகள் வாங்கி, அதிக விலை வெச்சு விற்பனை பண்ணாங்க. எங்களுக்கு லாபம் கம்மியாதான் கிடைச்சுது. அதனால நாங்க எல்லாரும் நெய்யுற புடவைகளை யெல்லாம் சேர்த்து வாரம் 1,000 புடவைகளுக்கு மேல நெய்து தர்றோம்னு மொத்த வியாபரிகள் கிட்ட பேசினோம். ஆர்டர்களும் கிடைச்சுது. இப்போ எங்களுக்கு ஒரு புடவைக்கு 500 ரூபாய் லாபம் கிடைக்குது. வீட்டு வேலைகளையும் பார்த்துக்கிட்டு முடிஞ்ச அளவு தறி ஓட்டி பெண்கள் சம்பாதிக்கிறாங்க. இப்போ நாங்களும் முதலாளிகள்’’ - பெருமையாகச் சொல்லும் பிரியதர்ஷினியைத் தொடர்ந்து எதிர்கால திட்டங்கள் பற்றி பேச ஆரம்பித் தார் உறுப் பினர்களில் ஒருவரான விஜி.
“நாங்க வசிக்கிற கிராமங்கள்ல வேலை வாய்ப்பு மிகப்பெரிய பிரச்னை. அதை சரி பண்றதுதான் எங்க இலக்கு. இப்போ எம்.எஸ் எம். இ மூலமா எம்.சி.டி.பி திட்டத்துக்கு (Micro Small Enterprises Cluster Development Programme) விண்ணப்பிச்சு இருக்கோம். அது அப்ரூவ் ஆயிட்டா எங்களுக்கு கிட்டத்தட்ட ஆறரை கோடி ரூபாய் கடனா மானியத்தோட கிடைக்கும். அதை வெச்சு எங்க ஊர்லயே பெரிய தொழிற்சாலை கட்டி நாங்களே நூல் தயாரிப்பு, புடவை நெய்யுறது, பேக்கிங்னு எ ல ்லாத்தை யு ம் பா ர்த்துக்கலா ம்னு இருக்கோம்.
எங்க ஊர்ல இன்னும் பலர், குறைஞ்ச அளவு கூலிக்கு வேலைக்குப் போயிட்டு இருக்காங்க. சில பெண்கள் ஆர்வம் இருந்தும் குடும்ப சூழல் காரணமா வேலைக்குப் போக முடியாம இருக்காங்க. நாங்க தொழிற்சாலை அமைச்சுட்டா இந்த நிலைமையை கண்டிப்பா மாத்திருவோம், அவங்க எல்லாரோட வாழ்க்கை யையும்...’’ - விடை பெறுகிறவர்களின் வார்த்தை களில் அவ்வளவு தன்னம்பிக்கை