எ.செந்தில்குமார், காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காட்டில் வசித்து வரும் நான் எனது கணவரின் வருமானத்தில் இரண்டு பெண் குழந்தைகளுடன் சிரமமான முறையில் குடும்பத்தை நடத்தி வந்தேன். தமிழ்நாடு மாநில நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்தின் கீழ் பல்வேறு வகையான பயிற்சிகளை இலவசமாக வழங்குவதை அறிந்து கொண்ட நான் தையல் பயிற்சி பெற தேர்வு செய்யப்பட்டேன்.
எனக்கு 15.07.2022 முதல் 29.08.2022 வரை பயிற்சி வழங்கப்பட்டது. தொழில்முறை பயிற்சியாளர்கள் சிறப்பான முறையில் பல்வேறு வகையான தையல், கட்டிங் மற்றும் பேட்டர்ன் மேக்கிங் என தையல் பயிற்சி அளித்தனர் பயிற்சி முடித்த பின்னர் பயிற்சி நிறுவனத்தின் மூலம் எங்களுக்கு 14:11,2022 தேர்வு நடத்தப்பட்டது. பயிற்சி நிறுவனம் எங்களுக்கு Seing Machine Operator Certificate & Mark sheet வழங்கியது.
நான் சொந்தமாக தையல் தொழிலைத் தொடங்க நம்பிக்கையுடன் இருந்தேன். எனக்கு பயிற்சி அளித்தது மட்டும் இன்றி எனது வீட்டிற்கு அருகில் உள்ள தையல் கடையில் பயிற்சி நிறுவனத்தின் மூலம் ரூ. 7700/- ஊதியத்தில் வேலை வாங்கி கொடுத்தனர். மேலும் என் வீட்டிலேயே ரவிக்கை மற்றும் சுடிதார் போன்றவற்றை தைத்து கொடுத்து அதன் மூலமும் வருவாய் பெற்று வந்தேன்.
நான் எங்கள் பகுதியில் செயல்படும் மகளிர் குழுவில் உறுப்பினராக இருப்பதால், சொந்தமாக தையல் தொழில் தொடங்க வேண்டும் என்ற விருப்பத்தில் மகளிர் குழுவின் மூலம் கடன் கேட்டு விண்ணப்பித்தேன். எனக்கு ரூ.50,000 கடன் கிடைத்தது. அந்தத் தொகையைக் கொண்டு, சொந்த தையல் இயந்திரம் ஒன்றை வாங்கி அதன்மூலம். வீட்டிலிருந்தபடியே வேலை செய்து வருகிறேன். எனக்கு இதன் மூலம் நல்ல வருமானமும் கிடைக்கிறது.
இப்போது, எனது சொந்த தையல் தொழிலை சிறப்பான முறையில் நடத்தி வருவதால் எனக்கு கணிசமான அளவு வருவாய் கிடைத்து வருகிறது. தற்போது நான் மகிழ்ச்சியாகவும், தன்னம்பிக்கையுடனும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எனது வாழ்க்கையை மாற்றிய தமிழ்நாடு மாநில நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்திற்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.