நிகழ்ச்சி நிரல்

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், மகளிர் சுய உதவிக்குழுக்களை கொண்டு மாதத்துக்கு 2 நாட்கள் அவர்களுடைய தயாரிப்புகளை விற்பனை செய்வதற்கு ஏதுவாக, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் ஏற்பாடு செய்து கொடுக்கிறது. தற்போது அந்த சந்தையை ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை நடத்த திட்டமிட்டுள்ளது. இதற்கு மதி வார சந்தை என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

மேலும்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (25.05.2022) சென்னை, இராணி மேரி கல்லூரியில், நடைபெற்ற மாநில அளவிலான முதல் இளைஞர் திறன் திருவிழாவை தொடங்கி வைத்து, 608 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக 25.66 கோடி ரூபாய் மதிப்பிலான வங்கிக் கடன் இணைப்புகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.கே.ஆர். பெரியகருப்பன், மாண்புமிகு தொழிலாளர்கள் நலன் - திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.சி.வி.கணேசன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி.ஆர்.பிரியா, சட்டமன்ற உறுப்பினர் திரு.த.வேலு, துணை மேயர் திரு. மு. மகேஷ்குமார், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் திருமதி பெ.அமுதா, இ.ஆ.ப., தொழிலாளர்கள் நலன் - திறன் மேம்பாட்டுத் துறைச் செயலாளர் திரு. ஆர். கிர்லோஷ் குமார், இ.ஆ.ப., தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி ம. பல்லவி பல்தேவ், இ.ஆ.ப., தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி ஜெ.இன்னசென்ட் திவ்யா, இ.ஆ.ப., தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் செயல் இயக்குநர் திருமதி பா.பிரியங்கா, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் (14.12.2021) திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிக்கடன் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி மற்றும் தயாரிப்புப் பொருட்களின் கண்காட்சியினைப் பார்வையிட்டார். உடன் மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.கே.ஆர். பெரியகருப்பன், மாண்புமிகு பால்வளத் துறை அமைச்சர் திரு. சா.மு.நாசர், நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் எஸ்.ஜெகத்ரட்சகன், சட்டமன்ற உறுப்பினர் திரு.ச.சந்திரன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் திருமதி பெ. அமுதா, இ.ஆ.ப., திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.

மேலும்

Page 6 of 6, showing 3 record(s) out of 48 total