நிகழ்ச்சி நிரல்

மாண்புமிகு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சிறுதானிய திருவிழாவினை தொடங்கிவைத்து, 314 பயனாளிகளுக்கு ரூ.25.26 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

மேலும்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (25.8.2023) இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவுப்படுத்தி, 31,008 பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் 17 இலட்சம் அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் தொடங்கி வைக்கும் விதமாக, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பிறந்த ஊரான திருக்குவளையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

மேலும்

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால், மகளிரின் முன்னேற்றத்திற்காக, 1989 ஆம் ஆண்டு முதன்முறையாக தருமபுரி மாவட்டத்தில் துவங்கப்பட்ட மகளிர் திட்டம் இன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது சமூக, பொருளாதார மேம்பாட்டை அடைவதற்கு இத்திட்டத்தின் மூலம் சுய உதவிக் குழுக்கள் மற்றும் கூட்டமைப்புகளை உருவாக்கி, முறையான பயிற்சிகள் வழங்கி, வருமானம் ஈட்டும் தொழில்களைத் தொடங்க வங்கிக் கடன் இணைப்புகள் ஏற்படுத்தி சுய உதவிக் குழு இயக்கத்தை வலுப்படுத்தி வருகிறது.

மகளிரின் முன்னேற்றத்திற்கான அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வரும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் அங்கமான தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கம் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் நகர்ப்புர குடும்பங்களின் வறுமையைப் போக்கவும், சமூக அமைப்புகள் அமைத்து, திறன் வளர்ப்பு பயிற்சி மூலமாகவும் மற்றும் வங்கி கடன் இணைப்பு மூலமாகவும் தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் செயல்படும் இயக்கம் ஆகும்.

2014 - ஆம் ஆண்டு முதல் இந்த இயக்கமானது மாநிலம் முழுவதும் உள்ள 649 நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது, இந்த இயக்கம் மூலம் 14.5 இலட்சம் ஏழை குடும்பங்களை உள்ளடக்கிய 1.30 இலட்சம் நகர்ப்புர சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் இன்று (14.08.2023) சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள், பெருநகர சென்னை மாநகராட்சியில் செயல்படும் 1808 நகர்ப்புர சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 23,424 மகளிர் சகோதரிகள் பயன் பெறும் வகையில் 100 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்புகள், உணவுத் தர பயிற்சி பெற்று சான்றிதழ் பெறவுள்ள 182 நகர்ப்புர சாலையோர வியாபாரிகளில் 50 நபர்களுக்கு இன்றைய தினம் உணவு தரச் சான்றிதழ், திறன் பயிற்சி பெற்ற 100 இளைஞர்களுக்கு ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் பணி நியமன ஆணைகள், சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த சிறு தொழில் முனைவோர்களுக்கு கடனுதவிகள், நகர்ப்புர சுய உதவிக் குழுக்களுக்கு சிறப்பான முறையில் வங்கிக் கடன்கள் வழங்கிய ஆறு வங்கிகளுக்கு வங்கியாளர் விருதுகள் மற்றும் 9 தொழில் பயிற்சி நிறுவனங்களுக்கு சான்றிதழ்கள் ஆகியவற்றை வழங்கி விழாப் பேருரையாற்றினார்.

மேலும்

ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் மாநில அளவிலான ஆலோசனை குழு கூட்டம் இன்று நடைபெற்றது. ஊரக வளர்ச்சி முதன்மைச் செயலாளர் திரு பி. செந்தில்குமார் ஐஏஎஸ், மேலாண்மை இயக்குனர் , திருமதி எஸ் திவ்யதர்ஷினி ஐஏஎஸ், செயல் இயக்குனர் திருமதி பி பிரியங்கா, ஐஏஎஸ் மற்றும் தேசிய இயக்குனர் திரு முருகேசன் ஆர். ஆர் சிங், வங்கி ஒருங்கிணைப்பாளர்கள,வங்கி அலுவலர்கள், ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குனர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்

மேலும்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சீரிய வழிகாட்டுதலின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் செயல்பாடுகளை மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் 21.07.2023 அன்று ஆய்வு செய்தார்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வழிகாட்டுதலில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கம், தீனதயாள் உபாத்தியாய ஊரகத் திறன் பயிற்சித் திட்டம் மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம்ஆகியவை சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

இந்த அமைப்புகளின் சார்பில் தமிழ்நாட்டின் ஊரக மற்றும் நகர்ப்புரப் பகுதிகளில் சுய உதவிக் குழுக்கள், கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் நகர்ப்புர பகுதி அளவிலான கூட்டமைப்புகள் போன்றவை அமைக்கப்பட்டு, பல்வேறு வறுமை ஒழிப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

சுய உதவிக் குழுக்களின் முன்னேற்றத்திற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. அத்திட்டங்களின் செயல்பாடுகள், அவற்றில் அடைந்துள்ள இலக்குகள், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் போன்றவை குறித்து மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் 21.07.2023 அன்று ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆய்வில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், பள்ளி மாணவ மாணவியரின் பசியைப் போக்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் சுய உதவிக் குழுக்களின் செயல்பாடுகள், இளைஞர் திறன் திருவிழாக்கள், சுய உதவிக் குழுக்கள் தயாரிப்புப் பொருட்களை சந்தைப்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள், மகளிர் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் உதவிகள், கிராம மற்றும் நகர்ப்புரங்களில் செயல்படும் சமுதாயம் சார்ந்த அமைப்புகளின் செயல்பாடுகள், அவைகளுக்கு வழங்கப்பட்டு வரும் நிதியுதவிகள், பூமாலை வணிக வளாகங்களின் செயல்பாடுகள், திறன் பயிற்சிகள், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் அரசின் நலத் திட்டங்களான மக்களைத் தேடி மருத்துவம் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் ஆகியவை குறித்து மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஆய்வு செய்து, திட்டங்களை திறம்பட செயல்படுத்திட உரிய ஆலோசனைகளை வழங்கினார்.

மேலும், சட்டமன்ற கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்ட பல்வேறு அறிவிப்புகளின் நிலை, குறிப்பாக சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 30,000 கோடி வங்கிக் கடன் வழங்க நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் அடைந்துள்ள முன்னேற்றம், இலக்கை விரைந்து எய்திட மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் போன்றவை இந்த ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

மேலும்

வணிகத்தில் இடைத்தைகர்களைத் தவிர்த்து உற்பத்தியாளர் கூட்டமைப்புகள் நேரடியாக பயனடையும் வகையில் 'உற்பத்தியாளர்-சந்தையாளர் ஒருங்கிணைப்பு' நிகழ்ச்சியை மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் 19.06.2023 அன்று தொடங்கி வைத்தார். இதன் மூலம் உற்பத்தியாளர் கூட்டமைப்புகள் (PCs) தங்கள் தொழில் வளத்தை மேம்படுத்திக்கொள்வர்.

மேலும்

மகளிர் சுய உதவிக்குழுக்களிலிருந்து எண்ணற்ற தொழில் முனைவோர்கள் வர வேண்டுமென ‘நுண் தொழில் நிறுவனங்களுக்கான நிதி’ திட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்த நிலையில், இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறை புத்தகத்தை இன்று (28.6.2023) மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டார் 

மேலும்

DDU GKY-DDU GKY-யில் திட்ட முடிவு குறித்த பட்டறை & DDU GKY & RSETIs மதிப்பாய்வு சென்னை மாமல்லபுரத்தில் 21.6.23 முதல் 23.6.2023 வரை நடைபெற்றது  .

மேலும்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (28.6.2023) தலைமைச் செயலகத்தில், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் ரூ.50 கோடி மதிப்பிலான நுண் தொழில் நிறுவன நிதித் திட்டத்தை தொடங்கி வைத்து, 10 மகளி சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு மொத்தம் 5.60 லட்சம் ரூபாய் கடனுதவியாக வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின், மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு. ஆர். காந்தி, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் ப. செந்தில்குமார், இ.ஆ.ப., ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர் மரு. தாரேஸ் அஹமது, இ.ஆ.ப., தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் முதன்மை செயல் அலுவலர் திருமதி ச.திவ்யதர்சினி, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும்

Page 2 of 5, showing 9 record(s) out of 42 total