நிகழ்ச்சி நிரல்

மகளிர் சுய உதவிக்குழுக்களிலிருந்து எண்ணற்ற தொழில் முனைவோர்கள் வர வேண்டுமென ‘நுண் தொழில் நிறுவனங்களுக்கான நிதி’ திட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்த நிலையில், இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறை புத்தகத்தை இன்று (28.6.2023) மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டார் 

மேலும்

DDU GKY-DDU GKY-யில் திட்ட முடிவு குறித்த பட்டறை & DDU GKY & RSETIs மதிப்பாய்வு சென்னை மாமல்லபுரத்தில் 21.6.23 முதல் 23.6.2023 வரை நடைபெற்றது  .

மேலும்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (28.6.2023) தலைமைச் செயலகத்தில், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் ரூ.50 கோடி மதிப்பிலான நுண் தொழில் நிறுவன நிதித் திட்டத்தை தொடங்கி வைத்து, 10 மகளி சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு மொத்தம் 5.60 லட்சம் ரூபாய் கடனுதவியாக வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின், மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு. ஆர். காந்தி, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் ப. செந்தில்குமார், இ.ஆ.ப., ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர் மரு. தாரேஸ் அஹமது, இ.ஆ.ப., தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் முதன்மை செயல் அலுவலர் திருமதி ச.திவ்யதர்சினி, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (28.6.2023) தலைமைச் செயலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் 5 கோடியே 16 இலட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட 26 மாவட்டங்களில் உள்ள பூமாலை வணிக வளாகங்களை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின், மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு. ஆர். காந்தி, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் செந்தில்குமார், இ.ஆ.ப  ஊரக வளர்ச்சி பற்றும் ஊராட்சித் துறை ஆணையர் மரு. தாரேஸ் அஹமது, இ.ஆ.பட, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் வாழ்ந்து காட்டுவோம் நிட்டத்தின் முதன்மை செயல் அலுவலர் திருமதி ச.திவ்யதர்சினி, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும்

மகளிர் முன்னேற்றத்திற்காக செயல்பட்டு வரும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் துணை அமைப்பான தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் (TNSRLM) வழிகாட்டுதலில் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு, சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. அக்குழுக்களின் பொருளாதார சுயசார்பிற்கு வலு சேர்க்கும் வகையில் வங்கிக் கடன் இணைப்புகள் உள்ளிட்ட ஏராளமான கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தமிழ்நாடு அரசின் 2023-2024ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 30,000 கோடி வங்கிக் கடன் இணைப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை செயல்படுத்தி, சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பு வழங்கும் இலக்கை எய்திடவும், சுய உதவிக் குழுக்களுக்கு விரைவாக வங்கிக் கடன் இணைப்புகள் பெற்றுத் தந்திடவும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, 20.06.2023 அன்று சென்னை, நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாக கூட்ட அரங்கில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (TNSRLM) மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி ஆகியவற்றிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி. ச.திவ்யதர்சினி, இ.ஆ.ப., அவர்களும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பொது மேலாளர் திரு. எம். மோகன் அவர்களும், கனரா வங்கியின் முதன்மைப் பொது மேலாளர் திரு. நாயர் அஜித் கிருஷ்ணன் அவர்களும் கையெழுத்திட்டனர். இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் செயல் இயக்குநர் திருமதி. பா. பிரியங்கா பங்கஜம், இ.ஆ.ப., அவர்கள், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் துணைப்பொது மேலாளர் திருமதி. துர்க்கா தேவி அவர்கள், உதவிப் பொது மேலாளர் திரு. தீபக் குமார் திரிபாதி அவர்கள், மேலாளர் சுமதி அவர்கள், கனரா வங்கியின் பிராந்திய மேலாளர் திரு. ஜி. விஜயராகவன் அவர்கள், மேலாளர் திரு. ஆர். உதயக்குமார் அவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும்

மகளிர் முன்னேற்றத்திற்காக செயல்பட்டு வரும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் துணை அமைப்பான தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் (TNSRLM) வழிகாட்டுதலில் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு, சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. அக்குழுக்களின் பொருளாதார சுயசார்பிற்கு வலுசேர்க்கும் வகையில் வங்கிக் கடன் இணைப்புகள் உள்ளிட்ட ஏராளமான கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தமிழ்நாடு அரசின் 2023-2024ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 30,000 கோடி வங்கிக் கடன் இணைப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை செயல்படுத்தி, சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பு வழங்கும் இலக்கை எய்திடவும், சுய உதவிக் குழுக்களுக்கு விரைவாக வங்கிக் கடன் இணைப்புகள் பெற்றுத் தந்திடவும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, 10.05.2023 அன்று சென்னை, நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாக கூட்ட அரங்கில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (TNSRLM) மற்றும் பாரத ஸ்டேட் வங்கி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி. ச.திவ்யதர்சினி, இ.ஆ.ப., அவர்களும், சென்னை வட்ட பாரத ஸ்டேட் வங்கியின் பொது மேலாளர் திரு. நிராஜ் பாண்டா அவர்களும் கையெழுத்திட்டனர்.

இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் செயல் இயக்குநர் திருமதி. பா. பிரியங்கா பங்கஜம், இ.ஆ.ப., அவர்கள், பாரத வங்கியின் துணைப் பொதுமேலாளர் திரு. ஜெகதீஸ்வர் கர்ரி அரசு மற்றும் பாரத ஸ்டேட்வங்கியின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்

இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், சுய உதவிக் குழுக்களின் வங்கி இணைப்பை அதிகரிப்பது மற்று கடன் வழங்குவதில் மாநிலம் முழுவதும் அதிக எண்ணிக்கையிலான கிளைகளை செயல்படுத்துவது, கிராமப்புற ஏழைகளின் கடன் தேவைகளைப் பூர்த்தி செய்ய கடன் சுழற்சியை மேம்படுத்துவது, கடன் திருப்பத்திற்கான எளிய வழிமுறைகளை செயல்படுத்துவது போன்ற பயன்கள் கிடைக்கும். மேற்கூறியவற்றைத் தவிர, முத்ரா, ஸ்டாண்ட் அப் இந்தியா மற்றும் பிற அரசு வழங்கும் திட்டங்களின் கீழ் சுய உதவிக் குழுக்களின் தகுதியுள்ள பெண் தொழில்முனைவோருக்கு SBI வங்கிக் கிளைகள் கடன் வசதிகளை வழங்கும்.

மேலும்

இந்தியாவில் செயல்படும் உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனமான HCLTech-ன் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு அமைப்பான HCL அறக்கட்டளை, அதன் முதன்மைத் திட்டங்களில் ஒன்றான HCL Samuday-ஐ தமிழ்நாட்டின் 95 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்த மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில், தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு முதன்மைச் செயலாளர் திருமதி. பெ.அமுதா, இ.ஆ.ப., மற்றும் HCL அறக்கட்டளையின் திட்ட இயக்குநர் திரு. அலோக் வர்மா ஆகியோர் இன்று (03.05.2023) சென்னை, தலைமைச் செயலகத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்நிகழ்வில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர் மரு. தாரேஸ் அகமது, இ.ஆ.ப., ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சிறப்புச் செயலாளர் முனைவர் மு.கருணாகரன், இ.ஆ.ப., தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி. ச.திவ்யதர்சினி, இ.ஆ.ப., தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் செயல் இயக்குநர் திருமதி. பா.பிரியங்கா பங்கஜம், இ.ஆ.ப., கூடுதல் இயக்குநர் திருமதி. க. முத்து மீனாள், HCL நிர்வாகக் குழு உறுப்பினர் திரு. ஷிகர் மல்ஹோத்ரா, HCL அறக்கட்டளையின் துணைத் தலைவர் டாக்டர். நிதி புந்திர், குழு மேலாளர் திரு. பிரிஜோ தாருக், திரு. எம்.விஸ்வலிங்கம், திரு. வைபவ் சவுகான் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

HCL Samuday தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புதூர் மற்றும் விளாத்திக்குளம் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 95 கிராம ஊராட்சிகளில் 1,40,000 பயனாளிகளுக்கு பயனளிக்கும் வகையில் நீர்வள மேலாண்மை, விவசாயம், சுகாதாரம், கல்வி, ஊட்டச்சத்து மேலாண்மை போன்ற துறைகளில் கவனம் செலுத்தி, பின்தங்கிய குடும்பங்களுக்கு சிறந்த வருமானத்திற்கு வழிவகுக்கும்.

HCL Samuday திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் 42,000 வீடுகளில் அடிப்படைக் கணக்கெடுப்பு முடிக்கப்பட்டு, ஒவ்வொரு கிராம ஊராட்சிக்கும் தேவையான திட்டங்கள் அடையாளம் காணப்பட்டு, அவை கிராம வளர்ச்சித் திட்டங்களாகத் தொகுக்கப்பட்டதின் வாயிலாக, கிராம சமூகங்களின் பங்கேற்பை அதிகரிக்க, தொடக்கத் திட்டங்கள் கண்டறியப்பட்டன.

    • 132 தொடக்கப் பள்ளிகளில் சிறந்த கற்றலுக்காக டிஜிட்டல் ஸ்மார்ட் போர்டுகள் பொருத்தப்பட்டுள்ளன.
    • டிஜிட்டல் கற்றலுக்காக 20 அங்கன்வாடி மையங்களின் செயல்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
    • 58 கிராம ஊராட்சிகளில் தொற்றாத நோய்களுக்கான மேம்பட்ட பரிசோதனை மற்றும் மேலாண்மை செய்யப்பட்டுள்ளன.
    • ஐந்து கிராம அளவிலான தையல் மையங்களில் தையல் இயந்திரங்கள் மூலம் சுய உதவிக் குழுக்களில் உள்ள 100 பெண்களுக்குப் பயிற்சி வழங்கி, அவர்களுக்கு வாழ்வாதார வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.
    • ஊட்டச்சத்துக் குறைபாடு மேலாண்மைக்கான சோதனை முகாமில் கண்டறியப்பட்ட ஊட்டச்சத்து குறைபாடுள்ள 41 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மருந்துகள் வழங்கப்பட்டன.

தற்போது, HCL Samuday உத்தரப்பிரதேசத்தில் உள்ள Hardoi மாவட்டத்தின் பதினொரு பகுதிகளில் செயல்பட்டு வருகிறது. மேலும் 524 கிராம ஊராட்சிகளில் 2,136 கிராமங்களில் வசிக்கும் 24 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் வாழ்வாதார வாய்ப்புகளை மேம்படுத்துவதில் பெரும்பங்காற்றி வருகிறது. HCL Samuday மிகவும் அத்தியாவசியமான சொத்துக்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை உருவாக்கிட அரசுடன் இணைந்து, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் உள்ளூர் சமுதாய அமைப்புகளுடன் ஆழ்ந்து ஈடுபடுவதன் மூலம் சிறப்பான அணுகுமுறையைப் பின்பற்றுகிறது. மேலும், வளர்ச்சித் திட்டங்களில் உள்ளூர் சமூகங்களை பொறுப்பேற்க தூண்டுகோலாகவும் அமைந்து வருகிறது.

மேலும்

Page 4 of 6, showing 9 record(s) out of 54 total