சுயமாக தொழில் செய்ய தயங்கியவர் தன்னுடைய பாரம்பரியத் தொழிலான மரச் செக்கு எண்ணெய் தொழில் செய்து வாழ்வாதாரத்தை உயர்த்தி உள்ளார் திருவாரூர் மாவட்டம். திருத்துறைப்பூண்டி வட்டாரம், வேளூர் ஊராட்சியில் வசிக்கும் ஷோபனா. எனது கணவரின் உதவியுடன் மரச் செக்கு இயந்திரம் மற்றும் மூலப் பொருட்களை வாங்கி எண்ணெய் எடுத்து விற்பனை செய்ய ஆரம்பித்தேன். தரமான எண்ணெயாக இருப்பதால் நான் உற்பத்தி செய்யும் எண்ணெயை அனைவரும் வாங்க ஆரம்பித்தனர். இதனால எனக்கு நல்ல வருமானம் கிடைக்க ஆரம்பித்தது. எனது குடும்பத்தின் வறுமையும் குறைய ஆரம்பித்தது.
தொழில் நன்றாக நடந்ததால் கூடுதலாக ஒரு இயந்திரம் வாங்கி மேலும் தொழிலை விரிவுபடுத்தலாம் என்று முடிவு செய்தேன். திருவாரூர் மாவட்ட மகளிர் திட்டத்தின் வழிகாட்டுதலில் எனக்கு மானியத்துடன் கூடிய கடனாக 2 இலட்சம் ரூபாய் கிடைத்தது. அதைக் கொண்டு எனது தொழிலை விரிவுப்படுத்தினேன். நான் தயாரிக்கும் எண்ணெயை டெல்டா விவசாயி என்ற பெயரில் விற்பனை செய்ய ஆரம்பித்தேன். அதன் மூலம் எனக்கு மாதம் ரூ.15.000/- வரை வருமானம் கிடைக்கத் தொடங்கியது.
இந்த சமயத்தில் எனது வாடிக்கையாளர்கள், மாவு அரைத்து விற்பனை செய்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார்கள்.நானும் அதற்கான இயந்திரங்கள் மற்றும் மூலப் பொருட்கள் வாங்க மீண்டும் மகளிர் திட்டம் மூலம் கடன் வாங்கி, தற்போது மாவு அரைத்து விற்பனை செய்து அதன் மூலமும் வருவாய் பெற்று வருகிறேன்.
சாதாரண பெண்ணாக இருந்த என்னை இன்று தொழில் முனைவோராக்கிய தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்திற்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.