எனக்கு கிடைத்த பணி வாய்ப்பு

திருவாரூர் மாவட்டம், கீரங்குடி கிராமத்தில் வசித்து வரும் என் பெயர் திலீப் (வயது 21). 12ஆம் வகுப்பு வரை படித்துள்ள நான். தனியார் கல்லூரியில் பொறியியியல் படித்து முடித்த பிறகு வேலை இல்லாமல் மிகவும் சிரமப்பட்டேன். அப்போதுதான் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வழிகாட்டுதலில் செயல்படும் செயல்தீனதயாள் உபாத்தியாய கிராமப்புற திறன் பயிற்சித் திட்டத்தின் (DDU-GKY) மூலம் Capital Educational and Charitable Trust நிறுவனத்தில் வேலை உத்திரவாதத்துடன் பயிற்சி அளிப்பதை அறிந்தேன். உடனடியாக எனது கல்வி சான்றுகளுடன் அந்த நிறுவனத்தை அணுகினேன். எனது சான்றுகளை சரிபார்த்த பிறகு உறைவிட வசதியுடன் கூடிய பயிற்சியில் சேர்ந்தேன். பயிற்சி முடிந்தவுடன் பெருங்குடியில் உள்ள Mi-Tech Bus Doors எனும் நிறுவனத்தில் CNC - Setter Cum Operator பணியில், மாதம் ரூபாய் 22.000 ஊதியத்தில் நிரந்தர பணியில் அமர்த்தப்பட்டேன்.

எனக்கு கிடைத்த பணி வாய்ப்பினால், என் ஊதியத்தை ஒரு பகுதியை என் குடும்பத்திற்கு அனுப்பி வைக்க முடிகிறது. நான் இப்போது மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளேன். என் நண்பர்கள் பலருக்கு தீனதயாள் உபாத்தியாய கிராமப்புற திறன் பயிற்சித் திட்டம் குறித்தும், அவற்றின் மூலம் பல்வேறு நிறுவனங்களில் தரும் பயிற்சிகள் குறித்தும் தெரிவித்து உள்ளேன். அதில் ஒரு சிலர் பயிற்சியில் சேர்ந்து உள்ளனர், இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்திற்கும், தீனதயாள் உபாத்தியாய கிராமப்புறத் திறன் பயிற்சித் திட்டத்திற்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.