மகளிருக்கான பரிசு பெட்டகங்கள் தயாரிக்கும் மகளிர் குழு

திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி ஒன்றியம், எலவம்பட்டி கிராமத்தில் செல்லியம்மன் குழு கடந்த 2014 ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இக்குழுவின் உறுப்பினர்கள் 6 நபர்கள் இணைந்து கோரை புல் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களுக்கான தயாரிப்பு பயிற்சியில் கலந்து கொண்டோம்.

இத்தொழிலை மேற்கொள்ள ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் சமுதாய முதலீட்டு நிதியிலிருந்து ரூ.1,00,000/- மற்றும் வங்கி கடனாக ரூ.5,00,000/ பெற்று கோரை புற்களை கொண்டு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத கோரை பை, நகை பெட்டகம், புடவைப் பெட்டி, பரிசுப் பெட்டி மற்றும் டீ கப் விரிப்பு போன்றவற்றை தயாரித்து விற்பனை செய்வதன் வாயிலாக ஒவ்வொரு உறுப்பினருக்கும் ரூ.9,000/- வரை மாத வருமானமாக கிடைக்கிறது. இந்தப் பொருட்களைத் தயாரிப்பதன் வாயிலாக குழு உறுப்பினர்களின் வாழ்வாதாரம் உயர்ந்து சுற்றுசுழலும் பாதுகாக்கப்படுகிறது. தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திய தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்திற்கு செல்லியம்மன் குழுவின் உறுப்பினர்கள் தங்களின் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.