என் பெயர் வினோதினி மணிவண்ணன். பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் கிராமத்தில் கடந்த 25 ஆண்டுகளாக குடும்பத்துடன் வசித்து வருகிறேன். என் கணவர் எலக்ட்ரிசியன் வேலை செய்து வந்தார். எனது மகள் MBA படித்துள்ளார். எனது மகன் BE படித்து வருகிறார். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த நான், என் கணவரின் குறைந்த அளவு வருவாயைக் கொண்டு குடும்பத்தை சிரமத்துடன் நடத்தி வந்தேன். இந்நிலையில் இருந்து மாறுவதற்கும், வாழ்வாதாரத்தை பெருக்குவதற்கும் சுய தொழில் செய்து வருமானம் ஈட்டலாம் என்ற எண்ணமும் விடாமுயற்சியும் என்னுள் ஏற்பட்டது.
இந்நிலையில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் இயங்கும் இசையருவி மகளிர் சுய உதவிக் குழுவில் சேர்ந்தேன். அக்குழுவில் இருந்து வங்கி நேரடிக் கடன் பெற்று அதனுடன் நண்பர்களிடம் சிறிது கடன் பெற்று, அதில் தையல் இயந்திரம் வாங்கி கிராமத்தில் உள்ள பெண்களுக்குத் துணி தைத்து தந்து வருமானம் ஈட்டி வந்தேன். ஆனாலும் போதுமான வருவாய் கிடைக்கவில்லை. ஆகையால் அழகு நிலையம் வைத்து வருமானம் ஈட்டலாம் என்று தோன்றியது.
அச்சமயத்தில் பெரம்பலூர் IOB வங்கியின் (REST) கிராமப்புற சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் மூலம் அழகு கலை சம்பந்தமான பயிற்சி பெற்றேன். தற்பொழுது பாடாலூர் ஊராட்சியிலேயே சிறிய அளவில் பெண்களுக்கான அழகு நிலையம் மற்றும் தையல் கடை நடத்தி வருகிறேன். எனவே, தொழிலை மேம்படுத்த ஆலத்தூர் வட்டார வணிக வள மையத்தின் மூலம் குறைந்த வட்டியில் ரூ.50,000/ சமுதாய தொழில் நிதி பெற்று. அதனைக் கொண்டு. அழகு நிலையத்திற்குத் தேவையானப் பொருட்கள் மற்றும் தையல் தொழிலுக்குத் தேவையான உபகரணங்களை வாங்கி தற்போது எனது தொழிலை நல்ல முறையில் நடத்தி வருகிறேன். தற்பொழுது நான் மாதம் ரூ.25,000/- முதல் ரூ.30,000/- வரை வருமானம் ஈட்டி, குடும்ப செலவுகள் மற்றும் படிப்புச் செலவிற்கு போக மீதி மாதம் ரூ.5,000/- வரை சேமித்து வருகிறேன். எனது வாழ்வாதார வளர்ச்சிக்கு உதவிய தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்திற்கு எனது தொ வித்துக் கொள்கிறேன். நன்றிகளைத்