வாழ்வாதார இயக்கத்தால் வறுமை நீங்கியது

தென்காசி மாவட்டம். புளியங்குடி நகராட்சியில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்தின் வழிகாட்டுதலில் அஷ்டலட்சுமி மகளிர் சுய உதவிக் குழு செயல்பட்டு வருகிறது. இக்குழுவில் உறுப்பினர்களாக உள்ள 12 பெண்கள் நெசவுத் தொழிலை மேற்கொண்டு வந்தனர். போதிய வருவாய் இல்லாத நிலையில் அனைவரின் குடும்பத்திலும் வறுமை நிலவி வந்தது. இந்த நிலையில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்தின் SEP-G திட்டத்தின் கீழ் வங்கிக் கடனாகரூ. 6 இலட்சம் அஷ்டலட்சுமி மகளிர் சுய உதவிக் குழுவிற்கு வழங்கப்பட்டது. இந்தத் தொகையைக் கொண்டு தங்களின் தொழிலுக்குத் தேவையான மூலப்பொருட்களை வாங்கி தற்போது நெசவுத் தொழிலை சிறப்பாக மேற்கொண்டு முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்.

தங்களுக்கு கடன் வழங்கி, தொழிலை சிறப்பாக மேற்கொள்ள உதவிய தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்திற்கு அஷ்டலட்சுமி மகளிர் சுய உதவிக் குழுவின் உறுப்பினர்கள் தங்களின் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.