தமிழ்நாடு மாநில அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார் வலர்களின் ஆதாரமையம் (TNVRC)

தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், பல்வேறு முக்கிய பங்காளர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கும் நோக்கத்திற்காக தமிழ்நாடு மாநில அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்களின் ஆதார மையம் (டி.என்.வி.ஆர்.சி-கூசூஏசுஊ) 2001-ஆம் ஆண்டு துவங்கப்பட்டு, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் ஆதரவுடன் செயல்பட்டு வருகிறது. இம்மையமானது, தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் - 1975ன் கீழ்பதிவு செய்யப்பட்டு, தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தின் ஒரு அங்கமாக செயல்படுகிறது.

நோக்கங்கள்:

  • திட்டப் பணியாளர்கள், சமுதாயம் சார்ந்த அமைப்புகள் மற்றும் மாநில / மாவட்ட / வட்டார அளவிலான முதன்மைப் பயிற்று நர்களுக்குதிறன் வளர்ப்பு பயிற்சி வழங்குதல்,
  • திட்டத் திற்கான பயிற்சி உபகரணங்கள் / கையேடுகள், விளக்க அட்டைகள் மற்றும் பயிற்சி சார்ந்த பிறபுத்தகங்கள் உருவாக்குதல்,
  • பல்வேறு சமூக, பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்கான தொழில் நுட்பசேவைகளை வழங்குதல்,
  • தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் கிராமப் புறங்களில் வறுமை ஒழிப்பு எனும் பெரும்பணியில் செயல் படுத்திய பல்வேறு உத்திகள், முன்முயற்சிகள், பெற்றபடிப்பினைகள் மற்றும் திட்டத்தின் நன்கு தேர்ந்த விளைவுகள் ஆகியவற்றைத் தொகுத்து ஒரு அறிவு சார் களஞ்சியமாக விளங்குதல் மற்றும் அரசுசாரா அமைப்புகளுடன் வளர்ச்சி தொடர்பான நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல்.

பயனாளிகள்:

மாவட்ட அளவில் திட்ட இயக்குநர்கள், உதவித் திட்ட அலுவலர்கள் வட்டார இயக்க மேலாளர், வட்டார ஒருங்கிணைப்பாளர், சமுதாய சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் சமுதாயம் சார்ந்த அமைப்புகளான ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கிராமவறுமை ஒழிப்புச் சங்கம், மக்கள் கற்றல்மையம் நிர்வாகிகள் ஆகியோர் ஆவர். திட்டப் பணியாளர்கள், சமுதாயம் சார்ந்த அமைப்புகள், வளபயிற்று நர்களுக்கு

செயல்பாடுகள்:

தமிழ்நாடு மாநில அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார் வலர்களின் ஆதாரமையம்(TNVRC), மாநில அளவில், திட்டப் பணியாளர்கள், சமுதாயம் சார்ந்த அமைப்புகள், வளபயிற்று நர்களுக்கு பயிற்சி வழங்குதல் பல்வேறு பயிற்சிகளை ஏற்பாடு செய்துநடத் துதல்மற்றும் பயிற்சிப் புத்தகங்கள் / வழி காட்டிகையேடுகள் தயாரித்தல், போன்ற முக்கியப் பணிகளை மேற்கொள்கிறது