தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம்

TNULM

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் நோக்கமானது நகர்ப்புற ஏழைகளிடையே சமுதாயம் சார்ந்த அமைப்புகளை உருவாக்கி அவர்களின் வறுமையையும், நலிவு நிலையையும் குறைத்து சுய வேலை வாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுடன் கூடிய வேலை வாய்ப்புகளுக்கு வழி வகுத்து, அதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தினை குறிப்பிடத்தக்க அளவில் மேம்படுத்துவதும், நிலைத்த தன்மை அடையச் செய்வதும் ஆகும்.

தமிழ்நாடு நகர்புற வாழ்வாதார இயக்கமானது 60:40 என்ற விகிதத்தில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் நிதியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 18 மேலும், நகர்ப்புற உறைவிடமற்றோருக்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய உறைவிடத்தை ஏற்படுத்தித் தருதல், நகர்ப்புற தெருவோர வியாபாரிகளுக்கு அவர்களின் வியாபாரத்தினை மேம்படுத்துவதற்கு உதவும் வகையில் பொருத்தமான இடம் ஒதுக்கீடு செய்தல், நிதி அமைப்புகள் மூலம் கடன் வசதி ஏற்படுத்துதல், சமூகப் பாதுகாப்பு அளித்தல் மற்றும் திறன் வளர்ப்பு மூலம் வளர்ந்து வரும் சந்தை வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட உதவுதல் போன்றவற்றை இந்த இயக்கம் முக்கிய இலக்காகக் கொண்டுள்ளது.