மக்கள் நிலை ஆய்வின் போது மாற்றுத்திறனாளி மற்றும் நலிவுற்றோர் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு நலிவுற்றோர் மேம்பாட்டு நிதியாக ரூ.10,000/- முதல் ரூ.25,000/- வரை தனிநபர் கடனாக வழங்கப்பட்டு வருகிறது. நலிவுற்றோருக்கான நிதியானது மாற்றுத்திறனாளிகளின் உணவுப் பாதுகாப்புக்கும், வாழ்வாதார செயல்பாடுகளுக்கும், உடல் நலக்குறைவு அல்லது எதிர்பாரா மருத்துவ செலவிற்கும் மற்றும் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டோரின் மறுவாழ்விற்கும் பயன்படுத்தப்படுகிறது