தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்களின் ஆதார மையம்

தமிழ்நாடு மாநில அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்களின் ஆதார மையம் (TNVRC) 2001 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இச்சங்கம் தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் 1975-ன் கீழ் பதிவு செய்யப்பட்டதாகும். இம்மையம் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் ஓர் அங்கமாகச் செயல்பட்டு வருகிறது. இச்சங்கத்தின் முக்கிய நோக்கமாக, திட்டப் பணியாளர்கள், சமுதாயம் சார்ந்த அமைப்புகள் மற்றும் மாநில / மாவட்ட / வட்டார அளவிலான முதன்மைப் பயிற்றுநர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி வழங்குதல், திட்டத்திற்கான பயிற்சி உபகரணங்கள் / கையேடுகள் மற்றும் பயிற்சி சார்ந்த பிற புத்தகங்கள் உருவாக்குதல், சமூக, பொருளாதார மேம்பாடு தொடர்பான சமுதாயம் சார்ந்த திட்டங்களை செயல்படுத்துதல் மற்றும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தால் செயல்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்களின் நடவடிக்கைகளின் சிறந்த முயற்சிகள், உத்திகள், படிப்பினைகள் மற்றும் விளைவுகளுக்கான அறிவுசார் மையமாக செயல்படுதல் ஆகும்.