சுனாமிக்குப் பின் நிலைத்த வாழ்வாதாரத் திட்டம்

சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்கள் மாநில, மாவட்ட அளவில் கண்காட்சிகள் மற்றும் தமிழ்நாடு முழுவதும் நிறுவப்பட்ட மதி அங்காடிகள் மூலம் சந்தைப்படுத்திட ஆதரவு வழங்கி வருகிறது. எளிதாக பயன்படுத்தக் கூடிய இணைய வழி விற்பனை செயலி உருவாக்கப்பட்டு, சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களை இளைஞர்கள் வாங்கும் வகையில் செயல்படுத்தப்படவுள்ளது.