நரிக்குறவர் சுய உதவிக் குழுப் பெண்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் விற்பனை மையம் திறப்பு

மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் 08.02.2023 அன்று காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் பூமாலை வணிக வளாகத்தில், நரிக்குறவர் சுய உதவிக் குழுப் பெண்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் விற்பனை மையத்தை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். இந்நிகழ்வின்போது, மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன், சட்டமன்ற உறுப்பினர்கள், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ம.ஆர்த்தி, இ.ஆ.ப., மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்