குடும்பத்தின் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்தல்.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் 2012-13 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசினால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஊரக ஏழை மக்களுக்காக வலுவான மற்றும் துடிப்பான சமுதாயம் சார்ந்த அமைப்புகளை உருவாக்கி, வாழ்வாதாரத்தை உயர்த்தி, நிதி மற்றும் பல்வேறு சேவைகளை முறையாகப் பெற வழிவகை செய்து, குடும்ப வருமானத்தை பெருக்குவதே இவ்வியக்கத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தின் கீழ் சமுதாயத்தில் உள்ள ஏழைகள், மிகவும் ஏழைகள், நலிவுற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்றோரே இலக்கு மக்கள் ஆவர். சிறப்பு சுய உதவிக் குழுக்கள் மற்றும் முதியோர் சுய உதவிக் குழுக்களில் இருபாலரும் உறுப்பினார்களாகச் சேர்க்கப்படுவர்.