மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் (இன்று) 14.08.2023 கலைவாணர் அரங்கத்தில் சென்னை.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால், மகளிரின் முன்னேற்றத்திற்காக, 1989 ஆம் ஆண்டு முதன்முறையாக தருமபுரி மாவட்டத்தில் துவங்கப்பட்ட மகளிர் திட்டம் இன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது சமூக, பொருளாதார மேம்பாட்டை அடைவதற்கு இத்திட்டத்தின் மூலம் சுய உதவிக் குழுக்கள் மற்றும் கூட்டமைப்புகளை உருவாக்கி, முறையான பயிற்சிகள் வழங்கி, வருமானம் ஈட்டும் தொழில்களைத் தொடங்க வங்கிக் கடன் இணைப்புகள் ஏற்படுத்தி சுய உதவிக் குழு இயக்கத்தை வலுப்படுத்தி வருகிறது.

மகளிரின் முன்னேற்றத்திற்கான அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வரும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் அங்கமான தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கம் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் நகர்ப்புர குடும்பங்களின் வறுமையைப் போக்கவும், சமூக அமைப்புகள் அமைத்து, திறன் வளர்ப்பு பயிற்சி மூலமாகவும் மற்றும் வங்கி கடன் இணைப்பு மூலமாகவும் தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் செயல்படும் இயக்கம் ஆகும்.

2014 - ஆம் ஆண்டு முதல் இந்த இயக்கமானது மாநிலம் முழுவதும் உள்ள 649 நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது, இந்த இயக்கம் மூலம் 14.5 இலட்சம் ஏழை குடும்பங்களை உள்ளடக்கிய 1.30 இலட்சம் நகர்ப்புர சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் இன்று (14.08.2023) சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள், பெருநகர சென்னை மாநகராட்சியில் செயல்படும் 1808 நகர்ப்புர சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 23,424 மகளிர் சகோதரிகள் பயன் பெறும் வகையில் 100 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்புகள், உணவுத் தர பயிற்சி பெற்று சான்றிதழ் பெறவுள்ள 182 நகர்ப்புர சாலையோர வியாபாரிகளில் 50 நபர்களுக்கு இன்றைய தினம் உணவு தரச் சான்றிதழ், திறன் பயிற்சி பெற்ற 100 இளைஞர்களுக்கு ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் பணி நியமன ஆணைகள், சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த சிறு தொழில் முனைவோர்களுக்கு கடனுதவிகள், நகர்ப்புர சுய உதவிக் குழுக்களுக்கு சிறப்பான முறையில் வங்கிக் கடன்கள் வழங்கிய ஆறு வங்கிகளுக்கு வங்கியாளர் விருதுகள் மற்றும் 9 தொழில் பயிற்சி நிறுவனங்களுக்கு சான்றிதழ்கள் ஆகியவற்றை வழங்கி விழாப் பேருரையாற்றினார்.