நீலகிரி மாவட்டம், உல்லத்தி ஊராட்சிக்குட்பட்ட முத்தநாடு மந்து கிராமத்தில் வசிக்கும் தோடர் பழங்குடி இனங்களை சேர்ந்த பெண்கள் இணைந்து தேன் கூட்டம், ரோஜா கூட்டம் என இரண்டு மகளிர் சுய உதவிக் குழுக்களை அமைத்துள்ளனர். குழுவின் மூலமாக நபார்டு லோன் வாங்கி, அந்தத் தொகையை மூலதனமாகக் கொண்டு, தோடர் இன ஷால், துப்பட்டா. மப்லர், பர்சு, செல்கவர், சுருக்கு பை, ரன்னர், கோட், ஹேண்ட்பேக் மற்றும் முகக் கவசம் போன்றவற்றைத் தயாரித்து, சுற்றுலா பயணிகள் வரும் இடத்தில் மதி மற்றும் மநிதி என்ற பிராண்ட் பெயரில் விற்பனை செய்து வருகின்றனர். இப்பொருட்களை உள்ளூர் மக்கள் மட்டும் இல்லாமல் சுற்றுலா பயணிகளும் அதை விரும்பி வாங்குகிறார்கள்.
இக்குழுவினர் தலைகுந்தா, சேவந்துமயில், மதி அங்காடிகளிலும் மகளிர் திட்டத்தின் மூலம் நடத்தப்படும் மாவட்ட மற்றும் மாநில கண்காட்சிகளில் பங்கேற்றும் தங்களின் தயாரிப்புப் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். இதன் மூலம் குழுவில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஒரு மாதத்திற்கு ரூ.8000/- வரை லாபம் கிடைக்கிறது. மேலும் வெளிநாடுகளுக்கும் இந்தப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
மேலும் மைசூர், சென்னை,பெங்களூர்,கோவை போன்ற இடங்களிலம் தங்களின் தயாரிப்பு பொருட்களை தேன் கூட்டம் மற்றும் ரோஜாக் கூட்டம் மகளிர் சுய உதவிக் குழுவினர் விற்பனை செய்து வருகின்றனர். இப்பொழுது HADP மூலமாக ரூ.2,00,000/- பெற்று Toda Hut என்னும் ஒரு வீடு கட்ட ஆரம்பித்துள்னார். இதில் இரு குழுவினரும் இணைந்து தைலம், தேன், டீதுாள் போன்றவை தயாரிக்க முடிவு செய்துள்ளனர்.