இயக்கம் தந்த தன்னம்பிக்கை

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, திருவளர்சோலை பகுதியில் வசித்து வரும் என் பெயர் அகிலா. எங்கள் பகுதியில் வசிக்கும் 12 பெண்கள் ஒன்று சேர்ந்து தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்தின் வழிகாட்டுதலில் NULM சூரியகாந்தி மகளிர் உதவிக் குழுவை ஆரம்பித்து, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி கிளையில் சேமிப்பு கணக்கு தொடங்கி செயல்பட்டு வருகிறோம். எங்கள் குழுவின் உறுப்பினர்களுக்கு மருத்துவ செலவு. படிப்பு செலவு என பல்வேறு செலவுகளுக்கு குழுவின் மூலம் உள்கடன் வழங்கப்பட்டு வருகிறது.

இக்குழுவில் உறுப்பினராக உள்ள நான், சுய தொழில் தொடங்க வங்கி கடனாக ரூ.30,000/- பெற்று பஞ்சகாவியம் என்னும் இயற்கை உரத்தினை தயாரித்து அதன் மூலம் வருவாய் பெற்று வருகிறேன். இந்த வருமானம் எனக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தியதுடன் சமூ கத்திலும் நன்மதிப்பை பெற்று தந்துள்ளது.

எங்கள் குழுவில் உறுப்பினர்களான கீதா என்பவர் சிறு பெட்டிக் கடையும். சுகன்யா என்பவர் விவசாயம் செய்தும், மலர்கொடி என்பவர் காய்கறி கடையும் வைத்து வருமானம் பெற்று வருகின்றனர்.

எங்கள் பகுதியில் செயல்படும் 9 மகளிர் சுய உதவிக் குழுக்களை இணைத்து பகுதி அளவிலான NULM திருவளர்சோலை ALF என்னும் குழுவையும் ஆரம்பித்து நடத்திக் கொண்டு வருகிறோம்

எங்களுக்கு பல்வேறு வகையிலும் வழிகாட்டி, எங்களுக்கு கடன் உதவிகள் வழங்கி, சுய தொழில் முனைவோர்களாக மாற்றியுள்ள தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்திற்கு எங்களின் NULM சூரியகாந்தி மகளிர் உதவிக் குழு உறுப்பினர்களின் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம